மேஷம்
எதிர்பார்த்த
காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட
வேண்டாம். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தை இயக்கும்
போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில்
தாமதம் ஏற்படும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
ரிஷபம்
திட்டமிட்ட
காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்
தருவீர்கள். கைமாற்றாக கொடுத்த பணம் கைக்கு வரும். மனதிற்கு இதமான
செய்திகள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
மிதுனம்
பிரச்சனைகளை
சமாளித்து வெற்றி காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் வருகையால்
வீட்டில் உற்சாகம் தங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணிய
ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல்
செய்வீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
கடகம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சில
வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள்
கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன
வாய்ப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
சிம்மம்
சந்திராஷ்டமம்
தொடங்குவதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும்
தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். உங்கள் வாயை சிலர்
கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். வெளி உணவை
தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
கன்னி
சவாலான
வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள்
கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தாயார் ஆதரித்துப்
பேசுவார். வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
துலாம்
எதிர்பாராத
பணவரவு உண்டு. பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில்
இருப்பவர்கள் உதவுவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது
சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள்
செய்வீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
விருச்சிகம்
புதிய
முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை
கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில்
எதிர்பாராத லாபம் உண்டு.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
தனுசு
நட்பால்
ஆதாயம் உண்டு. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன்
கருத்து மோதல்கள் வரக்கூடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதுப்
பொருள் சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை
அறிவிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
மகரம்
அதிரடியாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப்
பகிர்ந்துக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். புது
வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்
கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கும்பம்
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அழகு, இளமைக் கூடும். எதிர்பாராத
சந்திப்பு நிகழும். நம்பிக்கைக்குரியவர்கள் கைக்கு கொடுத்து உதவுவார்கள்.
வியாபாரத்தில் லாபம் வரும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
மீனம்
ராசிக்குள்
சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும்.
குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை
பயன்படுத்துவது நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி
வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...