மேஷம்
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில்
இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபார
ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில
சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
ரிஷபம்
உங்கள்
பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள்
நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில
முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில்
உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
மிதுனம்
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் வரும். எதிர்பார்த்த வேலைகள்
தடையின்றி முடியும். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில்
நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
கடகம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் சிறு
வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். கோபத்தால் இழப்புகள்
ஏற்படும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அலைச்சல்
இருக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம்
வேண்டாம்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
சிம்மம்
பிள்ளைகள்
உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள்.
மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சில பொறுப்புகள் உங்கள்
கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி
ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
கன்னி
குடும்பத்தாரின்
எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள்.
வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள்
கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
துலாம்
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். கடையை
விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
விருச்சிகம்
உடன்பிறந்தவர்கள்
உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். தாழ்வுமனப்பான்மை
நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது
பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
தனுசு
குடும்பத்தாரின்
ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் உங்களின்
பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் அனுபவம் உள்ள
வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை
ஏற்பார்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
மகரம்
குடும்பத்தில்
சந்தோஷம் நிலைக்கும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பு
வட்டம் விரியும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். விலை
உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு
கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
கும்பம்
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல்
தடை, தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது
நல்லது. கழுத்து மற்றும் கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் வசூல்
மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
மீனம்
குடும்பத்தில்
சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். அண்டை, அயலார் சிலரின்
செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். சகோதர வகையில் அலைச்சல் உண்டு.
வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை
அனுசரித்துப் போங்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...