மேஷம்
புதிய
பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு
மதிப்பளிப்பார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில்
புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை
முழுமையாக நம்புவார்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
ரிஷபம்
காலை
9. 35 மணி வரை வேலைச்சுமை வந்துப் போகும். பிற்பகல் முதல் சோர்வு நீங்கி
துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள்
விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத உதவி கிட்டும்.
தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
மிதுனம்
காலை
9. 35 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மறதியால் பிரச்னைகள் வந்து
நீங்கும். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக்
கொள்வார்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில்
வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள்
உண்டு.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
கடகம்
தன்
பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். கல்யாண பேச்சு
வார்த்தை சாதகமாக முடியும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின்
திறமைகள் வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
சிம்மம்
எதிர்பாராத
பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை
நாடுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய
பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
கன்னி
புதிய
சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.
சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை
எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து
உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
துலாம்
நட்பு
வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை
முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்
தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும்.
உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
விருச்சிகம்
கம்பீரமாக
பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக
இருப்பார்கள். சொத்துப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். வாகன வசதிப்
பெருகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின்
உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
தனுசு
காலை
9. 35 மணி வரை வீண் டென்ஷன் வந்துப் போகும். பிற்பகல் முதல் அலைச்சல்,
டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.
எதிர்பார்த்த பணம் வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.
வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
மகரம்
காலை
9. 35 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உங்களை அறியாமலேயே தாழ்வு
மனப்பான்மை தலைத் தூக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள்.
யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில்
வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்
கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
கும்பம்
திட்டமிட்ட
காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன்
அதிகரிக்கும். வாகனத்தில் கவனம் தேவை. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை
நீடிக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமையால்
சோர்வு வரக்கூடும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
மீனம்
சவாலான
விஷயங்களை சாமர்த்தியமாக முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும்.
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது பொறுப்பை
ஏற்பீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...