மேஷம்
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று
முடியும். பிரபலங்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்
உண்டாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி
ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
ரிஷபம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தாரின்
விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். சிறுசிறு அவமானம்
ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.
வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள்
வரும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
மிதுனம்
பிள்ளைகள்
உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள்.
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தாயார் ஆதரித்து பேசுவார்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை
பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
கடகம்
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்
கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வழக்கு சாதகமாகும். அரசால்
அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில்
அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
சிம்மம்
குடும்ப
வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.
நண்பர்கள் உதவுவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் புதிய
சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
கன்னி
எதிர்ப்புகள்
அடங்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்
ஏற்படும். புது வேலை அமையும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.
வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை
தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
துலாம்
உங்கள்
பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக
அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய
முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
விருச்சிகம்
குடும்பத்தில்
ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விலை
உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில்
வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
தனுசு
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். குடும்பத்தாரின்
உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு
வேலைச்சுமை அதிகரிக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர்
இழுத்தடிப்பார்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
மகரம்
குடும்பத்தில்
சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி
செய்வீர்கள். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை
அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப்
பார்க்க வேண்டி வரும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
கும்பம்
தவறு
செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். கைமாற்றாக
கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபார
ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யாகத்தில் சில
நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
மீனம்
கொடுத்த
வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை
பகிர்ந்துக் கொள்வார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில
சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...