மேஷம்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும்.
பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். சிலர் உங்களை குறைக் கூறினாலும்
அதைப் பெரிதாக்க வேண்டாம். கணுக்கால் வலிக்கும். வியாபாரம், உத்யோகத்தில்
மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
ரிஷபம்
சகோதரங்களின்
அரவணைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சரி
செய்வீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த
லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
மிதுனம்
குடும்பத்தினர்
உங்கள் ஆலோசனையை ஏற்பார். மனதிற்கு இதமான செய்திகள் வரும். அரசால்
அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான
திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி
நடந்து கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
கடகம்
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார்
என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.
வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் அமைதி
நிலவும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
சிம்மம்
நீண்ட
நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண்
டென்ஷன் வந்துப் போகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும்
ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில்
சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
கன்னி
உணர்ச்சிப்பூர்வமாகப்
பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசி, செயல்படுவீர்கள். பிள்ளைகளால்
பெருமையடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு-. வாகன வசதிப் பெருகும்.
வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள்
கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
துலாம்
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்களால்
ஆதாயம் உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை
கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
விருச்சிகம்
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே
என்று ஆதங்கப்படுவீர்கள். கேட்டை நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை
தவிர்ப்பது நல்லது. உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்க்கப்பாருங்கள்.
வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
தனுசு
விடாப்பிடியாக
செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து
அதிகம் யோசிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். திடீர் பயணங்கள்
உண்டு. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில்
மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
மகரம்
தன்னம்பிக்கையுடன்
பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை
நிறைவேற்றுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க
நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
கும்பம்
திட்டமிட்ட
காரியங்கள் கைக்கூடும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து
பேசுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். கடன் பிரச்னைகள் தீரும்.
புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் மூத்த
அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
மீனம்
பிரச்சனைகளை
சமாளித்து வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி
நடத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நவீன சாதனங்கள்
வாங்குவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் உங்கள்
உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...