மேஷம்
குடும்பத்தில்
ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். யோகா, தியானம் என மனம் செல்லும்.
மனைவிவழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள்.
வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள்
வரும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
ரிஷபம்
கனிவான
பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள்
மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. புதுப் பொருள்
சேரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு
ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
மிதுனம்
குடும்பத்தின்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை
நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின்
ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில்
மதிப்புக் கூடும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
கடகம்
முக்கிய
பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள்
வந்து நீங்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.
வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் பழைய
சிக்கல்கள் தீரும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
சிம்மம்
குடும்பத்தினருடன்
கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள்.
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வாகன
வசதிப் பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில்
உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
கன்னி
குடும்பத்தில்
சந்தோஷம் நிலைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விரும்பிய பொருட்களை
வாங்கி மகிழ்வீர்கள். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில்
வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக்
கிட்டும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
துலாம்
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில்
சலசலப்புகள் வந்து நீங்கும். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள்.
பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக
வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள்
மனம் விட்டு பேசுவது நல்லது. வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். ஆடம்பரச்
செலவுகளால் சேமிப்புகள் கரையும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் கணிசமாக
லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
தனுசு
குடும்பத்தாரின்
ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத்
தேடி வருவார். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வேற்றுமதத்தவர் உதவுவர்.
வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
மகரம்
நீண்ட
நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்.
பிரபலங்களின் நட்பு கிட்டும். வீடு, வாகனத்தை சீர் செய்வீ£கள்.
வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யாகத்தில் சில
நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கும்பம்
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத சில வேலைகள் முடியும். புண்ணிய ஸ்தலங்கள்
சென்று வருவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு
செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
மீனம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் அலைச்சலின் பேரில் முடியும்.
உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக்
கொள்ளாதீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில்
வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...