தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் முடங்கியதால், கடைசி நாளில்,
தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
அரசு துறைகளில், 'குரூப் 2 - ஏ' நேர்முகத் தேர்வு
அல்லாத பதவிகளில், 1,953 காலி பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி.,
ஏப்., 24ல் அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க, நேற்று கடைசி
நாள். அதனால், ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள், இரு நாட்களாக ஆன்லைன்
விண்ணப்ப பதிவில் ஈடுபட்டனர்.ஆனால், டி.என்.பி.எஸ்.சி., இணையதளம், இரு
நாட்களாக அவ்வப்போது தொழிற்நுட்பக் கோளாறால் முடங்கியது. நேற்று அதிகாலை
முதலே, இணையதளத்தில் பதிவு செய்ய முடியாமல், தேர்வர்கள் திணறினர்.
ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான பிரச்னைகள் ஏற்பட்டன.
இது குறித்து, தேர்வர் கள் கூறியதாவது:வேலைவாய்ப்புக்கான பணிகளில், டி.என்.பி.எஸ்.சி., பாரபட்சமாக செயல்படுகிறது. ஒவ்வொருபிரச்னைக்கும், கோர்ட்டுக்கு சென்று குட்டு வாங்கினால் மட்டுமே, சிக்கலை தீர்ப்பது என்ற நிலையில் உள்ளது. தேர்வர்களின் கோரிக்கையை பரிசீலிக்காமல், எதேச்சதிகாரத்துடன் செயல்படுகிறது.இணையதளம் இரு நாட்களாக, சரியாக செயல்படாததால், ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...