டிஇடி இரண்டாம் தாள் தேர்வில் கணக்கு, அறிவியல் பகுதியில் இடம் பெற்ற பல
கேள்விகள் கடினமாக இருந்ததால் பட்டதாரிகள் விடை எழுத திணறினர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் நேற்று முன்தினம் முதல்தாள் தேர்வு நடந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கான அந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் நேற்று முன்தினம் முதல்தாள் தேர்வு நடந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கான அந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்தது.
நேற்று
தாள் 2க்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 2
ஆயிரம் பட்டதாரிகள் பங்கேற்றனர். இவர்களுக்காக 1263 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில், மொத்தம் 31 ஆயிரத்து 235 பேர் தேர்வு
எழுத 88 ேதர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் 29 ஆயிரத்து 507
பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். 1728 பேர் வரவில்லை. சென்னையில் 94 சதவீத
வருகை இருந்தது. தேர்வு காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. முன்னதாக 9
மணி முதல் மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாள் 150 கேள்விகள் இடம் பெற்றன. அதில்
உளவியல், தமிழ், ஆங்கிலம், மற்றும் முக்கிய பாடங்களுக்கான கேள்விகள் இடம்
பெற்றிருந்தன. கேள்வித்தாள்கள் ஏ,பி, சி,டி என நான்கு வரிசைகளில்
தயாரிக்கப்பட்டு இருந்தது. நேற்றைய தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளில்
தமிழ், ஆங்கிலம், உளவியல் பாடப் பகுதிகளில் இடம் பெற்ற கேள்விகள் எளிதாக
இருந்தன. கணக்கு பாடத்தில் இடம் பெற்ற கேள்விகளில் 15 கேள்விகளுக்கான
விடையை கண்டு எழுதுவது கடினமாக இருந்ததாக பட்டதாரிகள் தெரிவித்தனர்.
அதாவது, 3 அல்லது 5 மதிப்பெண் கேள்விகளை போல கேட்கப்பட்டுள்ளன. ஒரு
கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவே 3 நிமிடங்கள் செலவிட வேண்டியிருந்ததாக
பட்டதாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல இயற்பியல் பாடப் பகுதியில் இடம் பெற்ற பெரும்பாலான கேள்விகள்
சிக்கலான கேள்விகளாக இருந்தன. குறிப்பாக எளிதில் விடை காண முடியாத அளவில்
இருந்தன. இதனாலும் அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்ததாகவும்
பட்டதாரிகள் வருத்தம் தெரிவித்தனர். இதனால் இந்த டிஇடி தேர்வில் தேர்ச்சி
சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக நடந்த டிஇடி தேர்வுகளுக்கான ‘தற்காலிக ஆன்சர் கீ’ யை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று மாலை இணைய தளத்தில் வெளியிட்டது. Wrong news
ReplyDeleteதகுதித்தேர்வும், தகுதியற்ற நடைமுறைகளும்:
ReplyDeleteTNTET-2017.
காலிப்பணியிடம் ஒன்று கூட இல்லாத நிலையில் தான் இன்று ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்றது.
லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்ததில் விண்ணப்பக் கட்டணம் மூலம் பல மடங்கு வருவாய் அரசுக்கு....
FRISKING சோதனை என்ற பெயரில் கொடுமைகள்.
வாட்ச், கர்ச்சீப் கூட எடுத்துவரக்கூடாதென்று.
இதென்ன UPSC தேர்வா????
அங்க கூட வாட்ச் ல எலக்ட்ரானிக் வாட்ச் மட்டும் தான் தடை.
விண்ணப்பித்த ஊரில் சென்டர் போடாமல் மாற்று ஊர்களுக்கு அலைய வைத்த கொடுமை வேறு.
6390 பணியிடங்கள்ல ஒண்ணு கூட TET க்கு கிடையாது. ஆனா 6390 பணியிடங்கள் TET தேர்வு மூலமா நிரப்பப் படும்னு கல்விஅமைச்சரே கதை விடுறாப்ள
6390 பணியிடங்கள்: PG-TRB, Polytechnic Lecturer, Special Teacher, Agri Teacher இந்த பணியிடங்களின் கூடுதல் தான்
இதில் TET தேர்வின் மூலம் நிரப்பப் படும் பணியிடம் ஒன்று கூட கிடையாது.
செயல்படாத அரசாங்கம் செயல்படுவது போல் காண்பிக்கவே TET தேர்வு, தேர்வில் Frisking சோதனை, என்று ஏமாற்று வேலைகள்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் வீட்ல வருமானவரி சோதனை பண்ணா கூட ஏதாச்சும் கிடைக்கும்.
ஆசிரியர் தேர்வெழுத வர்றவங்கள சோதனை பண்ணா என்ன கிடைக்கும்???
பி.எட் படிச்சவங்க காப்பி அடிக்கவா வர்றாங்க...
அடிக்கிற வெயிலுல கர்ச்சீப் கூட எடுத்துட்டு போகக்கூடாதுன்னு போட்டீங்களே ஒரு கண்டிசன்...
போய் ஏதாவது அணைக்கு தெர்மாகோல் போட்டு மூடுங்க மேதாவிகளா.......
தகுதித்தேர்வு என்ற பெயரில் தகுதியற்ற நடைமுறைகளால் வேதனைப்பட வைக்காதீர்கள்.
வேதனைகளுடன்....
பி.எட் பட்டதாரிகள்....