இன்றைய காலகட்டத்தில் டெக்னாலஜி அதிக அளவில் வளர்ந்துள்ளது. அதை பற்றிய விழிப்புணர்வு ஆசிரியர்களுக்கு அவசியம் இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்பதிவு!
1. Jammer-free-wireless-banyan
இதை அணிவதால் தேர்வு அறையில் Cell Phone Signal or any other signal Jammer கருவி பொருத்தி இருந்தாலும் இந்த உள்ளாடையில் உள்ள கருவியானது வேலை செய்யும். ஆனால் இத்தகயை உள்ளாடைகள் இயங்க சிறிய அளவிலான பேட்டரி மற்றும் ஒயர்கள் உள்ளாடையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவற்றை Frisking எனப்படும் உடலை ”தொட்டு உணர் சோதனை” மூலமாக அறிந்து தடுக்க இயலும்.
2. Contact Lens Camera:
இதை அணிவதால் தேர்வறையில் இருந்து வினாத்தாள்களை வெளியே உள்ளவர்களுக்கு படித்து காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இயல்பாக பார்த்தாலே போதும். தேர்வறைக்கு வெளியில் இருக்கும் நபர் வினாத்தாளை முழுமையாக அறிந்து கொள்ள இயலும்.
3. Micro in Earpiece Speacker:
இதை காதுக்கு வெளியே அணியாமல், காதுக்கு உள்ளேயே பொருத்திக் கொள்ள இயலும். தேர்வறைக்கு வெளியில் இருப்பவர் கூறும் விடைகளை காதுக்கு உள்ளே செவிப்பறைக்கு மிக அருகில் இருக்கும் Speaker மூலமாக கேட்டு விடை எழுத இயலும்.
எனவே தான் Frisking சோதனை நடத்தப்படுகிறது. இது தவிர்க்க இயலாத காலத்தின் கட்டாயமாக உள்ளது. எனவே இத்தகைய சோதனைகளின் அவசியத்தை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி!
அன்புடன் - பாடசாலை.
TAMILNDU LA THANA NEENGA IRukkinga web site famous ana enna vena solluvingal . apa anga nadantha sothnai sarinu solluringa
ReplyDelete