Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NEET Vs Technology? - Padasalai's Special Article.

NEET Exam - காதுக்குள் ஏன சோதனை? சட்டையை கிழித்து ஏன் சோதனை தெரியுமா?

அன்புள்ள பாடசாலை வாசகர்களே, 
வணக்கம். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு கட்டுரை.

       நம் பாடசாலை வாசகர்கள் எப்போதும் டெக்னாலஜி - இல் Updated ஆக இருக்க வேண்டும் என நாம் விரும்புவோம். தற்போதும் அதற்காகவே இக்கட்டுரை.

       NEET  தேர்வில் அதிகபட்ச சோதனை மாணவர்கள் பலரை சிரமத்துக்குள்ளாக்கியது என்பது உண்மை தான். ஆனால் இது அவசியமாகும். தற்போது நாம் விளக்குவது Spy Earpiece குறித்த விளக்கம்.


இந்த Spy Earpiece மிக மிக சிறியது. காதுக்கு உள்ளே மறைத்து கொண்டால் யாருக்கும் எளிதில் தெரியாது.


இதனை காதுக்கு உள்ளே பொறுத்த வேண்டிய இடம் படத்தில் சுட்டி காட்டப்பட்டு உள்ளது. 


இதனை கொண்டு வெளியில் உள்ளோர் கூறும் விடைகளை மிக தெளிவாக தேர்வில் எழுத இயலும். காதுக்குள் உள்ள Speaker ஐ மீண்டும் வெளியே எடுக்க Magnet தரப்பட்டு உள்ளது.

இந்த Speaker ஒரு ரூபாய் நாணயத்தினை விட பல மடங்கு சிறியது.

        இது போன்ற Latest Technology ஆசிரியர்கள் பலருக்கே புதிது. இவை ஏதோ கிடைப்பதற்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை. மிக குறைந்த கட்டணத்தில் (Rs. 500 முதல்) பல்வேறு Online வலைத்தளங்களில் மிக சுலபமாக கிடைக்கிறது.

 
      டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் நம் தமிழகத்தை சேர்ந்த திரு.சரவணன் அவர்கள் மர்மமான முறையில் சில மாதங்களுக்கு முன் இறந்தார். பல கோடி மதிப்பு உள்ள முதுகலை மருத்துவ படிப்பு சீட்டுக்காக அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றவாறு செய்தி தாள்களில் சொல்லப்பட்டு வரும் நிலையில் பல இலட்சம் செலவழித்து படித்து வரும் மாணவர்கள் NEET தேர்வில்  வெற்றி பெற எவ்வித தவறும் செய்து விட கூடாது என்று இவ்வாறு சோதனை செய்வதை ஏற்று கொன்டே ஆக வேண்டும். 

        இருப்பினும் சோதனைகள் குறித்தும், தேர்வின் போது தவிர்க்க வேண்டியவை குறித்தும் மாணவர்களுக்கு மேலும் தெளிவாக விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கலாம் என்பதே நம் பாடசாலையின் கருத்து.




 (காதுக்குள் Torch அடித்து பார்க்கும் சோதனை)


 Technology இல் என்றும் முன்னணியில் நம் பாடசாலை வாசகர்கள்!


 நன்றி!
அன்புடன் - பாடசாலை.









4 Comments:

  1. அறிவு ஜீவிளே
    முழுகை சாட்டையை எதற்கு கிழித்தார்கள்.
    துப்பட்டாவை எதற்கு தூக்கி போட்டார்கள்.தலைமுடியை எதற்கு விரித்து போட சொன்னார்கள்
    இதற்கும் விளக்கம் சொல்லுங்கள்.
    Speaker காதில் மைக் வாயில் வைத்திருப்பார்களா வாயில் ஏன் பார்க்கலா
    மைக் இருந்தா தானே கேள்வியை வெளியில் சொல்ல முடியும்
    ஒரு அறையில் என்ன எலக்ட்ரானிக் பொருள் இருக்கிறது என்ன சிக்னல் இருக்கு கண்டுபிடிக்கிற தொழில்நுட்பமும் இருக்கு செலவு அதிகம் இல்லை.

    ReplyDelete
  2. ரூ.500 ஆ எனக்கு 100 பீஸ் வேண்டும் எங்கு கிடைக்கும்? இது கொஞசம் ஓவர்.......

    ReplyDelete
  3. அறிவிலிகள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கும் வரை இது போல தான் நடக்கும்

    ReplyDelete
  4. அறிவிலிகள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கும் வரை இது போல தான் நடக்கும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive