இந்திரா
காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையான, இக்னோவில், மாணவர் சேர்க்கை
அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, இக்னோ மண்டல இயக்குனர், எஸ்.கிஷோர்
வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இக்னோ பல்கலையில், ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள், பணியில் இருப்போர், இல்லத்தரசிகள் போன்றோர், இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேரலாம்.
சென்னை, நந்தனம் அண்ணா சாலையில், ஜி.ஆர்.காம்ப்ளக்ஸ், மூன்றாவது மாடியில் இயங்கும், இக்னோ மண்டல அலுவலகத்திலும், கல்வி மையங்களிலும் விண்ணப்பங்களை பெறலாம்.www.onlineadmission.ignou.ac.in இணையதளத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
சி.ஏ., - ஐ.சி.டபிள்யு.ஏ., - ஏ.சி.எஸ்., படிக்கும் மாணவர்களுக்கு, சிறப்பு பி.காம்., படிப்பும் நடத்தப்படுகிறது. இது குறித்த விபரங்களை, 044 - 2431 2766 என்ற தொலைபேசி எண்ணில் தெரிந்து
கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...