Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

HR SEC HM PROMOTION COUNSELLING 2017-2018

         அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் 500 தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுழற்சி பட்டியலில் வரிசை எண். 1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

          HR SEC HM PROMOTION COUNSELLING 2017-2018 | அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 20.05.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் (ONLINE) வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில் நடைபெற உள்ளது. தற்போது காலியாக உள்ள 500 தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுழற்சி பட்டியலில் வரிசை எண். 1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும்   தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். 
 
           2017-2018 ஆம் கல்வியாண்டிற்கு அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான  அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அரசாணை (1 டி) எண்.256 பள்ளிக் கல்வித் 5( 1) துறை நாள் 19.04.2017 அரசாணையின்படி 01.01.2017 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் பட்டியலில் உள்ளவர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 20.05.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் (ONLINE) வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில் நடைபெற உள்ளது என்ற விவரம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான சுழற்சி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
 
            அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது காலியாக உள்ள 500 தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுழற்சி பட்டியலில் வரிசை எண். 650 வரை இடம் பெற்றுள்ள ஆசிரியர்களில் பதவி உயர்வு துறப்பு செய்பவர்களின் பணியிடங்களையும் மாணவர்கள் நலன் கருதி நிரப்ப வேண்டியுள்ளதால், இந்த சுழற்சி பட்டியலில் வரிசை எண். 
 
            1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் தவறாமல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இந்த கலந்தாய்விற்கான அனைத்து பணிகளையும் முன்னதாக செய்து வைத்துக் கொள்ளுமாறும் மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு எந்த இடத்தில் நடைபெறவுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்.
 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive