Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

How to get Black and long hair?

கருமை நிறம் கொண்ட அடர்த்தியான அழகான முடியை பெற சில டிப்ஸ்!

        வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயை சற்று சுடவைத்து, முடியில் அடிவரை விரல்களால் தடவி மசாஜ் செய்யவும்.           ஒரு  மணி நேரம் கழித்து மிருதுவான துண்டை இளஞ்சூடான நீரில் பிழிந்து தலையில் கட்டிக் கொண்டால் எண்ணெய் தலையில் உறிஞ்சிக் கொள்ளும். பிறகு  20 நிமிடம் கழித்து ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து நன்கு அலசவும். தலைமுடி உறுதியாகவும்  ஆரோக்கியமாகவும் விளங்கும்.
 
இரண்டு டேபிள் ஸ்பூன் காஸ்மெடிக் வினிகருடன் 6 டேபிள் ஸ்பூன் வெந்நீர் கலந்து, தலை முடியின் அடிவரை படும்படி நன்கு  தடவவும். தலையை ஒரு துண்டினால் கட்டி, மறு நாள் காலை ஷாம்பூ தேய்த்து அலசவும். கடைசியாக 3 டேபிள் ஸ்பூன் வினிகரும், 1 கப் வெந்நீரும் சேர்த்து தலையை நன்கு அலசி காய வைக்கவும். இது போல் வாரம் இரு முறை செய்தால்  பொடுகு வராது.
 
ஒரு சிறிய கற்பூரத் துண்டை (சூடம்) 4 டேபிள் ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் நன்கு தடவி, துண்டினால் சுற்றிக் கொள்ளவும். மறு நாள் காலை ஷாம்பூவால் நன்கு அலசவும். மாதம் ஒரு முறை இவ்வாறு குளித்தால்  பேன்கள் அண்டாது.
 
ஒரு எலுமிச்சம்பழச் சாறுடன் 4 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்து தலையில் நன்கு தடவி, அரை மணி நேரம் கழிந்ததும் ஷாம்பூ தேய்த்துக் குளிக்கவும். இதை வாரம் ஒரு முறை செய்தால் முடி நன்கு வளரும்.
 
நாம் உண்ணும் உணவில் புரோட்டீன் அடங்கிய தானியங்கள், பருப்பு வகைகள், பால், தயிர், வைட்டமின்கள் நிறைந்த கீரை,  பச்சை காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொள்வது உதவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive