ஒரு அறையில் இரகசிய கேமரா உள்ளதென்பதை கண்டறிவது எப்படி ?
பொது இடங்களில் நாம் பயன்படுத்தும் கழிப்பறைகள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள், உடை மாற்று அறைகள் போன்ற இடங்களில் வைக்கப்படிருக்கும் கண்ணாடிகள் மூலம் நாம் நம்மை மட்டுமே பார்க்க இயலும் என்று நினைத்தால் அது தவறு.நமக்கு தெரியாமலே எதிரில் இருந்து வேறொருவர் நம்மை பார்க்க வாய்ப்புள்ளது.அப்படி அவர் நம்மை பார்ப்பது நமக்கு தெரியாது.மாறாக நமக்கு நம் பிம்பம் மட்டுமே பிரதிபலிக்கப்படும்.சரி இதனை எப்படி கண்டறிவது?
எப்போதும் ஹோட்டல் அறைக்கு செல்லும்போது மிக கவனமாக இருத்தல்வேண்டும். இரகசிய கேமரா பொருத்தமாட்டில் பல சம்பவங்கள் நம் செய்திகளில் பார்க்கமுடியும். பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கேமரா தயாரித்து சிலர் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.
கண்டுபிடிப்பது எப்படி?
ஹோட்டல் அறை, உடை மாற்றும் அறைகளில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது ஆள் காட்டி விரலை வைக்க வேண்டும். இப்போது விரல் நுனிக்கும், கண்ணாடி பிம்பத்தில் தெரியும் பிம்ப ஆள்காட்டி விரல் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி. இல்லையேல், அது கண்ணாடிக்கு பின்னால் இருந்தும் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘இரு பக்க’ கண்ணாடியாகும். கண்ணாடிக்கு பின்னால் இருந்துகொண்டு அறையில் நடப்பதை பார்க்க முடியும்.
ஹோட்டல்களில் தங்கும் அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைக்க வேண்டும். பின்னர், அறை முழுவதையும் செல்போனில் வீடியோ எடுக்க வேண்டும். தொடர்ந்து அதை ஓடவிட்டுப் பார்த்தால் எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் அங்கு ரகசிய கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.
செல்போனில் யாரிடமாவது பேசியபடி அறை முழுவதும் மெதுவாக நடக்க வேண்டும். திடீரென இரைச்சல் சத்தம் கேட்டால், அருகே ரகசிய கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருக்கிறது என்பது உறுதி.
விளக்குகளை அணைத்து விட்டு கண்ணாடி மீது டார்ச் அடித்துப் பார்த்தால், பின்னால் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறியலாம்.
பல வடிவங்களில்
ரகசிய கேமராக்கள் கதவு கைப்பிடி, கடிகாரம், சுவிட்ச், சுவிட்ச் போர்டு, பல வகை லைட் வடிவம், அலங்கார விளக்கு, பொம்மை, குளியல் அறை லைட், ஷவர், வாட்டர் ஹீட்டர், பூந்தொட்டி, திரைச் சீலை, வரவேற்பறை மாடல்கள், போர்டுகள் என எந்த வடிவங்களிலும் இருக்கலாம்.
செல்போன்:
அறைக்குள் நுழைவதற்கு முன் உங்கள் செல்போனிலிருந்து கால் செய்ய முடிகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். பின்னர் அறைக்குள் சென்றவுடன் மீண்டும் உங்கள் செல்போனிலிருந்து கால் செய்து பார்க்கவும் .பலமுறை முயற்சித்தும் உங்களால் கால் செய்ய முடியாவிட்டால் நிச்சயம் அங்கே ரகசிய கேமரா வைகப்பட்டிருகிறது.
கேமரா டிடெக்டர்:
நீங்கள் ஹோட்டல் அறையில் நுழையும்போது மிக கவனமாக கேமரா டிடெக்டர் பயன்படுத்தவும். கேமரா டிடெக்டர் ஆன்லைனில் மிக எளிமையாக வாங்கலாம்.
கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்: அறையில் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் போன்ற பொருட்களை மிக கவனமாக பார்க்கவேண்டும். பொதுவாக இரகசிய கேமரா அதில்தான் மறைத்துவைக்கப்பட்டிருக்கும். அறையில் தகுந்த பாதுகாப்பு கேடயங்கங்களைப் பயனபடுத்த வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...