Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

How to control Bad Breath

யாரும் அருகில் வர முடியாத அளவு உங்க வாய் நாற்றம் அடிக்கிறதா? அதைத் தடுக்க இதோ பல டிப்ஸ்…

வாய் துர்நாற்றமா?
 வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா?
பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்களா?
இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்றத்தை விரட்டி அடித்துவிடலாம்.

ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும்.


வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர் நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள்.

மற்ற காரணங்கள்: புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு.

மருத்துவ ரீதியான காரணங்கள்:

தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் பிரச்சனை (Infection) ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும். இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள்.

அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவு மண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.

வாய் துர்நாற்றத்தை போக்க பத்து வழிகள்:

1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப் பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

2. Mouth Washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக் கொள்ளலாம்.

3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவது போல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.

4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice)ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.

9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves)வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.

வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மூலிகை:

வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம். சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க்கொப்பளித்துவிடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும். மேலும் இரவு படுக்க போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.

கிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது. அதேபோல ஒவ்வொரு முறை பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம். குளோசப் டூத்பேஸ்ட் விளம்பரங்களில் வருவதைப் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதோடு முக்கிய எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவிடலாம்.

குறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும். இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி..!

வாய் துர்நாற்றத்தைத் தடுக்க மேலும்சில வழிகள்

அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்
வாய் உலர்ந்து போனால் தான் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே எப்போதும் தண்ணீர் குடித்துக் கொண்டே இருந்தால், வாய் துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்கலாம்.

உணவைத் தவிர்க்க வேண்டாம்
எப்படி வாய் உலர்ந்தால் துர்நாற்றம் வீசுகிறதோ, அதேப் போல் உணவைத் தவிர்த்து வந்தாலும் துர்நாற்றம் வீசும். ஆகவே எப்போதும் உணவைத் தவிர்க்கக்கூடாது. முக்கியமாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

கீரைகளை அதிகம் சாப்பிடவும்
உணவில் குளோரோபில் நிறைந்த உணவுப் பொருட்களான கீரையை அதிகம் உட்கொள்ள வேண்டும். முக்கியமாக கொத்தமல்லியை உணவில் சேர்த்து வந்தால், அது வாயை புத்துணர்ச்சியுடன் வைத்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்.

நாக்கை சுத்தம் செய்யவும்
பற்களை துலக்கும் போது, நாக்கை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் நாக்கின் மேல் உள்ள வெள்ளை படலம் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்க அன்றாடம் நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

மசாலாப் பொருட்கள்
ஏலக்காய், கிராம்பு, சோம்பு போன்றவற்றை வாயில் போட்டு மென்று வந்தால், வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, துர்நாற்றம் தடுக்கப்படும். குறிப்பாக கிராம்பில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள், வாய் துர்நாற்றத்தை மட்டுமின்றி, ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

காபிக்கு பின் தண்ணீர்
காபி அல்லது டீ குடித்த பின்னர், தவறாமல் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதனால் வாயில் pH அளவு சீராக பராமரிக்கப்பட்டு, துர்நாற்றம் தடுக்கப்படும்.

சூயிங் கம்
எந்நேரமும் கையில் பிரஷ் அல்லது மௌத் வாய் வைத்துக் கொண்டு சுற்ற முடியாது. எனவே தவறாமல் சுகர்-ப்ரீ கொண்ட சூயிங் கம்மை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும். குறிப்பாக புதினா சுவை கொண்ட சூயிங் கம்மை பயன்படுத்துவது நல்லது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive