Home »
» Health Tips: Do you want long life? Must Eat these Foods!
சூப்பர் உணவுகள் என்பது அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை
உள்ளடக்கியுள்ள அருமையான உணவாகும்.
அந்த சத்துக்கள் என்னவென்றால்,
ஆன்டிஆன்ஸிடன்ட்கள், பாலிபினால், வைட்டமின்கள், மற்றும் தாதுக்கள்
ஆகியவை.
இவற்றை சாப்பிடுவதால் நாள்பட்ட நோய்களால் ஏற்பட்ட பாதிப்பைக்
குறைக்கலாம், நீண்ட ஆயுள் பெறலாம். மேலும் இந்த உணவுகளை
சாப்பிடாதவர்களை விட சாப்பிடுபவர்கள் ஆரோக்கியமானவர்களாகவும், அதிக
பருமன் இல்லாதவர்களாகவும் இருப்பதை காண முடிகிறது.
முளைக் கீரையில் உள்ள பைட்டோஸ்டெரால்ஸ் உடலில் உள்ள கொழுப்புச்
சத்தைக் குறைக்கின்றது.
இதில் உள்ள அழற்ஜி எதிர்ப்பு தன்மை வீக்கத்தையும், வலியையும்
தடுக்கிறது. இந்த கீரையில் அதிகமான புரதங்களும், நார்ச்சத்துக்களும்
உள்ளன. இது புற்றுநோய் மற்றும் இரத்த அழுத்தத்தைக்
கட்டுப்படுத்துகிறது. மேலும், இளநரை ஏற்படாமலும் தடுக்கும்.
பட்டாணி :
பட்டாணியில் கொழுப்புக் குறைவாகவும், புரதச்சத்து, நார்ச்சத்து
மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன. இதில் உள்ள
ஆன்டிஆக்ஸிடன்ட்களும் அழற்ஜி நீக்கும் பண்புகளும் இதயத்தை
பாதுகாக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும்
கட்டுப்படுத்துகிறது. மேலும் இதற்கு வயிற்றுப் புற்றுநோயை தடுக்கும்
தன்மையும் உள்ளது.
புதினா
புதினாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும்
பைட்டோநியூட்ரியான்ட்ஸ் அஜீரப் பிரச்சனைகளை சரிசெய்ய கூடியது. இது
வயிற்றுப் பிடிப்பு, அசிடிட்டி, வாய்வுத் தொல்லை மற்றும் குடல்
சம்பந்தப்பட்டப் பிரச்சனைகளையும் சரிசெய்யும்.
புதினாவிற்கு உடலின் வலிகள் அனைத்தையும் போக்கும் குணம் உண்டு.
மேலும், வாய் வழி தொற்றுக்களான சளி, இருமல் போன்றவை பரவுவதையும்
தடுக்கும்.
கோஜி பெர்ரி
கோஜி பெர்ரிரியானது கண்கள், கலலீரல் மற்றும் சிறுநீரகம்
சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய உதவுவது. இதில் உள்ள அதிகப்படியான
வைட்டமின் சி சளி தொல்லையை குறைக்கிறது. உடல் எடை குறையவும்,
சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவதற்கும் அதில் உள்ள
பீட்டா-கெரோடின் தான் காரணம்.
சோயாபீன்ஸ்
சோயாவில் புரதச்சத்துக்களும் மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம்,
இரும்புச்சத்து, செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ளன. இது
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. இது இதயத்திற்கு
பாதுகாப்பு அளிக்கிறது.பல்வேறு வகையான புற்றுநோய்கள், இதய நோய்
மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்வற்றின் அபாயத்தை குறைக்க
உதவுகிறது.
பார்லி
பார்லியில் உள்ள நார்ச்சத்து நீண்ட ஆயுளை அளிக்கும். உடல் எடை
குறைக்க பெரிதும் உதவுகிறது. இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை
அளவையும் குறைக்கிறது. இதயத்தைப் பாதிக்கும் பல்வேறு நோய்களை பார்லி
எளிதில் தடுத்துவிடும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...