முதல் காலாண்டு முடிவுக்குப் பிறகு புதிய வரிக் கொள்கைகள் அறிமுகம் மற்றும் கட்டுப்பாடுகளால் இந்தியாவில் தங்கம் இறக்குமதி குறையும் என்று உலகத் தங்க கவுன்சில் (WGC) புதன்கிழமை கூறியுள்ளது.
2016-ம் ஆண்டு 524 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் வரும் காலங்களில் இது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தங்கம் இறக்குமதி குறைந்தால் தேவை அதிகைக்கும் என்றும் விலை உயரும் என்றும் வல்லுநர்கள் கூறும் நிலையில் உலகத் தங்க கவுன்சில் எந்த அளவு தங்கம் இறக்குமதி குறையும் என்று கூறியுள்ளது, அதைப் பற்றி இங்கு விளக்கமாக இங்குப் பார்ப்போம்.
தங்கம் இறக்குமதியில் முதல் காலாண்டில் மட்டும் 253 டன்கள் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் புதிய வரிக் கொள்கை ஜூலை ஒன்று முதல் அறிமுகம் செய்யப்பட இருப்பதினால் வரும் காலாண்டுகளில் மொத்தமாகவே 271 டன்கள் மட்டும் தான் தங்கம் இறக்குமதி செய்யப்படும் என்று கூறுகின்றது. அதன்படி சராசரியாக ஒரு காலாண்டுக்கு 90 டன்கள் மட்டுமே தங்கம் இறக்குமதி செய்யப்படும். புதிய விதிகளின் படி சுத்தம் செய்யப்படாத தங்கத்தை இறக்குமதி செய்ய முடியாது என்றும் இந்திய தரநிலைகள் பிஐஎஸ் (BIS) இடம் அனுமதி பெறாத சுத்திகரிப்பு மையங்கள் தடை செய்யப்படும் என்று உலகத் தங்க கவுன்சிலலின் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் பி ஆர் தெரிவித்தார். இந்தியாவில் இதுவரை 3 அல்லது 4 தங்கம் சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டும் தான் இந்திய தரநிலைகள் பிஐஎஸ் (BIS) இடம் அனுமதி பெற்றுள்ளன என்று ஆனால் மொத்தம் 31 முக்கியச் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்ளன என்றும் அதனால் இந்தத் தடை 3 முதல் 4 மாதங்கள் வரை தள்ளிவைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா தான் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகம் தங்கம் இறக்குமதி செய்யும் நாடாகும்.சென்ற ஆண்டுச் சீனா 674 டன்கள் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாகவும், இறக்குமதி குறையும் போது தேவை அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர். இந்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகத் தங்கம் இறக்குமதியைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது,
அதற்காகத் தங்க பத்திரங்கள் திட்டம் மட்டும் இல்லாமல் வரி, பான் கார்டு அவசியம் போன்ற பல முடிவுகளை எடுத்துள்ளது. இந்தியாவில் தற்போதயத் தங்கம் தேவை 650 முதல் 750 டன்களாக உள்ளதாகவும் ஆனால் தேவையான அளவு இறக்குமதி செய்வது கடினம் தான் என்றும் சோமசுந்தரம் கூறினார். இதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...