தொழில்நுட்பம் நாம் சிறிதும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தினம் தினம் வளர்ந்து வருகிறது. ’பெண் மனசு ஆழமுன்னு’ என்ற பாடலின் கரு நாம் அனைவரும் அறிந்ததே.
மனிதர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியாது என்பதுதான் நாம் எப்போதும் சொல்லி வரும் விஷயம். போகிற போக்கைப் பார்த்தால் அதையும் அறிந்து கொள்ளலாம் போலிருக்கிறது. கூகுளின் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. கூகுள் டெவலப்பர்கள் மாநாட்டில் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து உரையாற்றினார் கூகுள் நிறுவன சிஇஒ சுந்தர் பிச்சை. அப்போது கூகுளின் வருங்காலத் திட்டமாக ”மொபைல் ஃபர்ஸ்ட் டு ஏஐ ஃபர்ஸ்ட்”இருக்குமென்ற முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
வருங்கால திட்டமான மொபைல் ஃபர்ஸ்ட் டு ஏஐ ஃபர்ஸ்ட் மேம்படுத்தப்பட்ட கூகுள் ஹோம், கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் லென்ஸ், கூகுள் புகைப்பட செயலி, விபிஎஸ் மற்றும் ஏஐ ஆகியவை முக்கியமான அம்சங்களாக பார்க்கப்படுகின்றன. கூகுள் ஹோம் மூலம் நமது வீட்டின் மின்சாதனங்களை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். மேலும் நமக்கு தேவையான தகவல்களை தேடவும் உதவுகிறது.
இனி நீங்கள் கூகுள் ஹோம் மூலம் இலசமாக கால் செய்ய முடியும். யூட்யூபின் 360 டிகிரி வீடியோக்களை உங்கள் வீட்டு டிவியிலும் பார்க்க முடியும். மேலும் சூப்பர் சாட் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த சேவை மூலமாக, யூடியூப் லைவ் வீடியோக்களில் உங்களின் கமெண்டை அனைவரையும் பார்க்க வைக்கலாம். கூகுளின் புகைப்பட செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி பதிவேற்றம் செய்யப்படும் 120 கோடி புகைப்படங்களில், நீங்கள் எடுக்கும் தன்னிச்சையான புகைப்படத்தை தேர்ந்தெடுத்து அந்த புகைப்படத்தில் உள்ள நபரை கண்டறிந்து அவருக்கு பகிரும் அளவுக்கு இந்த செயலி வளர்ந்துள்ளது.
நீங்கள் எடுக்கும் புகைப்படத்தில், நம்மை மறைக்கும் தடைகளை அகற்றித் தரும் கூகுள் செயலி. உதாரணமாக கம்பி வேலியின் பின் உள்ளவரை புகைப்படம் எடுத்தால், அந்த கம்பி வேலியை அகற்றிக் கொடுக்கும் கூகுள் செயலி. விபிஎஸ் (விவல் பொசிசனிங் சிஸ்டம்) என்னும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது கூகுள். பொதுவாக ஜிபிஎஸ்ஐ பயன்படுத்தி நீங்கள் எந்தக் கடையில் சென்று ஷாப்பிங் செய்யலாம் என்று முடிவு செய்வீர்கள். இனி விபிஎஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அந்த கடையில் எந்த பொருள் எங்கிருக்கிறது என்பதை உங்கள் மொபைலிலேயே அறியலாம்.
விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி உள்ளிட்டவற்றை மேம்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. கூகுள் ஸ்டாண்ட் அலோன் என்னும் புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி தயாரிப்பை எச்டிசி மற்றும் லெனோவா நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூகுள் கூறியுள்ளது. ஆகுமெண்ட்டட் ரியாலிட்டியைப் பயன்படுத்தி கூகுல் ஃபார் டேப் சேவை, மரபு ரீதியான நோய்களைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பங்கள், கோட்லின் என்ற கணினி மொழியில் செயலிகளை உருவாக்கும் வசதி, ஆகிவற்றை உருவாக்க உள்ளதாக கூகுள் கூறியுள்ளது. ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவுத் திறனை பற்றி பலரும் பேசினார்கள். இதன் மூலம் ’ஏஐ’, நமது விருப்பத்தை புரிந்து கொண்டு நமக்கான உதவிகளை தன்னிச்சையாக செய்யும். கூகுல் மொழியாக்கம் முதல் கூகுல் புகைப்பட செயலி வரை அனைத்துக்கும் முக்கியமான காரணம் ஏஐ என்ற இந்த கூகுள் அசிஸ்டண்ட் தான். இவற்றை அடிப்படையாக வைத்துத்தான் அனைத்து தயாரிப்புகளையும் கூகுள் உருவாக்கியுள்ளது.
200 கோடி மக்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த வெர்சனான ’ஆண்ட்ராய்டு ஓ’ வின் பீட்டா வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டது. 1ஜிபி ரேம் கொண்ட போன்களிலும் ஆண்ட்ராய்டின் புதிய வெர்சன் பாதுகாப்பாகவும், வேகமாகவும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் லென்ஸ் மூலம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை உங்கள் கைபேசியின் கேமராவில் காட்டினால் அதைப்பற்றிய முழு தகவல்களையும் உங்களுக்கு அளித்துவிடும். உதாரணமாக நீங்கள் செல்லும் வழியில் ஒரு பூவை பார்க்கிறீர்கள். அந்த பூவைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் அந்த பூவை உங்கள் கேமராவில் காட்டினால் போதும், உங்களுக்கு எல்லா தகவல்களையும் கூகுள் லென்ஸ் தெரிவித்துவிடும்.
கடினமான வைஃபை ரகசிய எண்ணை மிக எளிதாக கூகுல் லென்ஸ் மூலம் அறிந்து கொள்வதுடன், வைஃபை-யை இணைத்தும் கொள்ளலாம். மேற்கொண்ட வசதிகளை கொண்ட கூகுள் அசிஸ்டண்ட்கள் அனைத்து ஆண்டராய்டு மொபைல்களிலும் ஆங்கிலம் பிரேசில், போர்சுகீசியம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் உள்ளது. விரைவில் இத்தாலியன், கொரியன் ஸ்பானிஸ் மொழிகளிலும் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...