பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.675 கட்டணத்துக்கு அதிக வேகத்துடன்
செயல்படும் பிராட் பேண்ட் சேவையை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் குறைந்த
பட்ச பதிவிறக்க வேகம் 4 எம்பிபிஎஸ் ஆக உள்ளது.
இதுதவிர, பல்வேறு திட்டங்களில் பதிவிறக்கம் செய்யும் அளவு 250 சதவீதம் அதிக
ரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 20 ஜிபியில் இருந்து 70 ஜிபி வரை
அதிகரிக்கப்பட்டுள்ளது.1199 காம்போ திட்டத்தில் பதிவிறக்க வேகம் 2
எம்பிபிஎஸ்-ல் இருந்து 4 எம்பிஎஸ் ஆக 20 ஜிபி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஒரு ஜிபிக்கான கட்டணம் ஒரு ரூபாய்க்கு குறை வாகவே
உள்ளது.இத்திட்டத்தில் ஏற்கெனவே சேர்ந்துள்ள வாடிக்கையாளர் களுக்கு இந்த
புதிய பிராட்பேண்ட் சேவை மே 1-ம் தேதி முதல் வழங் கப்படும். இதற்காக
மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
மேலும், இத்திட்டத்தில் குடும்ப நண்பர்கள் இடையே 3 தரைவழி
தொலைபேசி எண்களுக்கு அளவில்லா அழைப்பு வசதியும் உண்டு. இதுகுறித்து கூடுதல்
விவரங்களை 1800-345-1500என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது
www.chennai.bsnl.co.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என
பிஎஸ்என்எல் நிறுவனம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Welcome
ReplyDelete