தனியார் பள்ளிகளை போல, அரசுப்பள்ளி மாணவர்களின் சீருடையும்,
’பளீச்’ நிறத்தில், காட்சிக்கு அழகாக இருக்கும்படி, மாற்றம் செய்ய
வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில், 861 அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துக்குட்பட்ட
தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இங்கு, ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், மாணவியருக்கு மெரூன் நிறத்தில், பாவடை, சட்டையும், மாணவர்களுக்கு, கால்சட்டை, மேல்சட்டையும், சீருடையாக உள்ளது.
தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இங்கு, ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், மாணவியருக்கு மெரூன் நிறத்தில், பாவடை, சட்டையும், மாணவர்களுக்கு, கால்சட்டை, மேல்சட்டையும், சீருடையாக உள்ளது.
இதுதவிர, 261 நடுநிலைப்பள்ளிகள், 197 உயர்நிலை, மேல்நிலை
பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு, சுடிதாரும், மாணவர்களுக்கு,
பேண்ட், சட்டையும் சீருடையாக அளிக்கப்படுகிறது.
ஆண்டுக்கு நான்கு ’செட்’ சீருடை வழங்கப்படுகிறது. இதை அணியும்
ஒரு மாதத்திற்குள், ’வெளிரிய’ நிறத்தில், பழைய சீருடை போல
காட்சியளிக்கிறது.
தனியார் பள்ளிகளில், காட்சிக்கு அழகாக இருக்கும் படியாக,
கோடு, கட்டம் போட்ட சீருடை அளிக்கப்படுவதால், மாணவர்கள் தனித்தன்மையுடன்
தெரிகின்றனர். இதைபோல, அரசுப்பள்ளி சீருடையிலும் மாற்றம் செய்ய
வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
ஒருங்கிணைந்த பெற்றோர் மாணவர் நலசங்க மாநில பொதுசெயலாளர்
சரவணவேல் கூறுகையில், ”அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும்
சீருடை தரமற்றதாக உள்ளது. மற்றவர்களுடன் பழக, அரசுப்பள்ளி மாணவர்கள்
தயங்குகின்றன.
எனவே, அடுத்த கல்வியாண்டு முதல், தரமான துணியில், தனியார்
பள்ளி மாணவர்கள் அணிவது போல, புதுமையான டிசைன்களில், சீருடை அளித்தால்,
மாணவர்கள் பயனடைவர்,” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...