🔹 தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டு எந்திரங்கள் நம்பகத்தன்மை
இல்லாதவை,
அவற்றில் மாற்றம் செய்து தேர்தல்ம முடிவுகளில் தில்லுமுல்லு
செய்ய முடியும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
ஆனால் அவர்களின் இந்த கருத்தினை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து
வருகிறது.🔸 இந்த விவகாரம் குறித்தும், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும் அனைத்துக் கட்சிகளிடமும் விவாதிக்க ஏற்ற வகையில் தேர்தல் கமிஷன் தில்லியில் இன்று (12.05.17) அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
👉 இந்த கூட்டத்தின் முடிவில் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
🔹 இனி இந்தியாவில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வாக்காளர எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
🔸விரைவில் நடைபெற உள்ள குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் தேர்தல்களில் இத்தகைய இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...