'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்காக, தமிழக
அரசால் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா, ஜனாதிபதி ஒப்புதலுக்கு போகாமல், மத்திய
உள்துறை அமைச்சகத்தில், கிடப்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, நாடு முழுவதும், இளநிலை
மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, அகில இந்திய அளவிலான,
'நீட்' பொது நுழைவுத் தேர்வை, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
நிறைவேற்றம்
'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அதைத் தொடர்ந்து, 'மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையிலும், முதுநிலை படிப்பு சேர்க்கையிலும், தற்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும்' என, தமிழக சட்டசபையில், ஒருமனதாக சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
அதற்கு ஒப்புதல் பெற்றுத் தரும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் பழனிசாமி, இரண்டு முறை கடிதம் எழுதினார். ஆனால், இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
ஆனால், தமிழக அமைச்சர்கள், 'சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்து விடும். இந்த ஆண்டு, தமிழகத்தில், 'நீட்' தேர்வு நடைபெறாது' என கூறி வந்தனர்.
இந்த சூழ்நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட, 'நீட்' மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் எம்.பி., டி.கே.ரங்கராஜன், ஏப்., 17ல், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து, ஏப்., 20ல், அவருக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 'அதுபோன்ற எந்த மசோதாவோ, அவசர சட்டமோ, எங்களுக்கு வரவில்லை. உங்கள் கடிதம், உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
'தமிழக சட்டத்திற்கு, விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்துவிடும்' என, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூறி வந்த நிலையில், சட்ட மசோதா இன்னமும், ஜனாதிபதி அலுவலகத்திற்கே செல்லவில்லை என்ற தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கூடுதல் விளக்கம்
இதுகுறித்து, தமிழக அரசு அதிகாரிகள் கூறியதாவது:தமிழக சட்ட மசோதா, ஜனாதிபதி அலுவலகத்திற்கு, இன்னமும் செல்லவில்லை என்பது உண்மை தான். தமிழக சட்டசபையில், சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதும், கவர்னரிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
அதன்பின், தமிழக சட்டத்துறை மூலமாக, முறைப்படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், இந்த சட்டம் குறித்து, மத்திய சுகாதாரம் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம், கருத்து கேட்டனர்.
அதன்படி, இரு அமைச்சகங்களும் கருத்து தெரிவித்தன. அது தொடர்பாக, கூடுதல் விளக்கம் கேட்டு, மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.
மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட, கூடுதல் விபரங்கள் அளிக்கப்பட்டன. அந்த விபரங்கள் மீது, மீண்டும் மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம், மத்திய உள்துறை அமைச்சகம் கருத்து கேட்டு
உள்ளது.
காலதாமதம்
அந்த அமைச்சகங்கள் கருத்து தெரிவிப்பதில், காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு துறைகள் தெரிவிக்கும் கருத்தை பரிசீலித்த பிறகே, மத்திய உள்துறை அமைச்சகம், சட்ட மசோதாவை, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும். இதை விரைவுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இன்று தேர்வு!
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, இன்று நடக்கிறது. நாடு முழுவதும், 11.35 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகத்தில், 88 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலுார் ஆகிய இடங்களில் அமைத்துள்ள மையங்களில், தேர்வு எழுதுகின்றனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...