துணை வேந்தர் இல்லாத நிலையில், கவர்னரின் கையெழுத்துடன் பட்டமளிப்பு விழா
நடத்த, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. அண்ணா பல்கலையில், கடந்த ஆண்டு,
மே முதல், துணை வேந்தர் பணியிடம் காலியாக உள்ளது.
துணை வேந்தரை தேர்வு செய்ய, தேடல் குழு
அமைக்கப்பட்டது. ஆறு மாதங்கள் தாண்டிய பிறகும், இன்னும் புதிய துணை வேந்தரை
தேர்வு செய்யவில்லை. துணை வேந்தர் இல்லாமல், கடந்த ஆண்டு பட்டமளிப்பு விழா
நடத்தவில்லை; இந்த ஆண்டும், பட்டமளிப்பு விழா தாமதம் ஆகியுள்ளது. பட்ட
சான்றிதழ் இல்லாமல், இன்ஜி., முடித்த மாணவர்கள், வெளிநாடுகளில்
வேலைவாய்ப்பு பெற முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே, தற்போதைய நிலைமையை சமாளிக்க, கவர்னர் கையெழுத்துடன் கூடிய பட்டம்
வழங்க, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. அதன்படி, 19ம் தேதி மாலை, 5:00
மணிக்கு பட்டமளிப்பு விழா நடத்த, கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். துணை
வேந்தர் இல்லாமல், முதல் முறையாக வேந்தரான கவர்னர் மற்றும் உயர் கல்வி
செயலரின் கையெழுத்துடன், இன்ஜி., மாணவர்களுக்கு, பட்ட சான்றிதழ் வழங்கப்பட
உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...