ஆயுதங்களுடன்,
'செல்பி' எடுப்பவர்களும், அதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில்
பதிவிடுவோரும், சிறைக்கு செல்ல நேரிடும்' என, உ.பி., கோர்ட்
எச்சரித்துள்ளது.
உ.பி., மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது; இங்குள்ள கவுதம புத்த நகர் மாவட்ட கோர்ட்டில், செல்பி தொடர்பான ஒரு வழக்கில், நீதிபதி, பி.எம்.சிங் உத்தரவிட்டதாவது: திருமண நிகழ்ச்சிகளில், துப்பாக்கி குண்டு முழங்க ஊர்வலம் நடத்துவதும், சமூக வலைதளங்களில், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் எடுக்கப்பட்ட செல்பி புகைப்படங்கள் வெளியிடுவதும் அதிகரித்துள்ளது.
எனவே, ஆயுதங்களுடன் செல்பி எடுப்பவர்களின் பட்டியலை தயாரிக்கும்படி, போலீசாருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ளவர்கள் மீது, அந்தந்த பகுதி போலீசார் நடவடிக்கை எடுப்பர். குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து, சிறைக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...