பெட்ரோல், டீசல் பயன்படுத்துவதற்கு பதிலாக அனைத்து வாகனங்களையும்
மின்சக்தியில் இயங்கக் கூடியதாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
எரிபொருள் இறக்குமதியை குறைப்பதற்காகவும், வாகனங்களை இயக்குவதற்கான செலவை குறைக்கவும் அனைத்து
வாகனங்களையும் மின் சக்தியில் இயங்கக் கூடியதாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2030 ம் ஆண்டிற்குள் இந்தியாவில் அனைத்து வாகனங்களையும் எலக்ட்ரானிக் வாகனங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ம் ஆண்டில் ஒரு டீசல், பெட்ரோல் வாகனம் கூட விற்பனை செய்யப்பட கூடாது என்ற அளவில் மாற்ற ஐடியா உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதன் முன்னோட்டமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் எலக்ட்ரானிக் வாகனங்களை தயாரிக்க உதவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக கொள்கைளும் நிதி ஆயோக் மூலம் வகுக்கப்பட்டு வருகிறது. மக்கள் விரும்பும் வகையில், குறைந்த விலையில் எலக்ட்ரானிக் வாகனங்கள் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...