தமிழக
பாடநுால் கழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இந்திய பொருளாதாரம்,
வணிகவியல் போன்ற புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், தமிழக பாடநுால் கழகத்தால், வினியோகம் செய்யப்படுகின்றன. கல்வி ஆண்டு துவங்கும் முன், புதிய புத்தகங்களை வாங்க, பாடநுால் கழகத்திற்கு பெற்றோர் செல்வது வழக்கம். மே, ஜூன் மற்றும் ஜூலையில், பாட புத்தகங்களை, அதிகாரிகள் இருப்பு வைக்காததால், பெற்றோர் வார கணக்கில் அலைய வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 பாட புத்தகங்கள் மட்டுமே, பாட நுால் கழகத்தில் விற்கப்படுகின்றன. அவற்றிலும், இந்திய பொருளாதாரம், வணிகவியல், கணக்கு பதிவியல், பயோ கெமிஸ்ட்ரி, அரசியல் அறிவியல், வரலாறு, கணினி அறிவியல் போன்ற புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதனால், புத்தகங்கள் வாங்க, பாடநுால் கழக விற்பனை மையங்களுக்கு வரும், பெற்றோர் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே, புத்தகங்களை போதிய அளவு இருப்பு வைக்க, பள்ளிக்கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...