அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் விளையாட்டு ஆசிரியர்களுக்கு(பிஇடி) 3 நாள்
பயிற்சியை நடத்த முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி நேற்று முதல் 18ம் தேதி வரை இந்த பயிற்சி நடக்கிறது. இந்த
பயிற்சிக்காக அந்தந்த மாவட்டத்தில் உள்ள விளையாட்டு ஆசிரியர்களுக்கு
செல்போன் மூலம் அவசர அழைப்பு விடுக்கப்பட்டது.
நேற்று
காலை மாவட்ட அலுவலகங்களில் குவிந்த விளையாட்டு ஆசிரியர்களுக்கு திறந்தவெளி
மைதானத்தில் புதிய விளையாட்டுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
அதாவது, பீச் வாலிபால், உள்ளிட்ட விளையாட்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோடையில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் விளையாட்டு ஆசிரியர்கள்
வெயிலில் பயிற்சி எடுத்து அவதிப்பட்டனர். இது குறித்து பள்ளிக்் கல்வி
இயக்குநருக்கு புகார்கள் அனுப்பியும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என
விளையாட்டு ஆசிரியர்கள் புலம்புகின்றனர். மேலும், இந்த பயிற்சியை பள்ளி
திறந்த பிறகு அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...