இந்திய மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தையும்,
பாதுகாப்பையும் மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பெண்களுக்கெனப்
பிரத்தியேக திட்டத்தை அறிவிக்க உள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக இந்திய பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கும் தற்போதைய அளவை விட அதிகரிக்கும் என நம்புகிறது.
அப்படி என்ன திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கப்போகிறது. வாங்க பார்போம்.
சிறப்புத் திட்டம்..
திருமணம் ஆகாத பெண்களுக்கு வருமான வரியில் குறைப்பு, ஆதார் எண் இணைப்பில் ஹெல்த் கார்டு மூலம் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இலவச ஹெல் செக் அப் ஆகியவற்றை அடங்கிய பெண்களுக்கான சிறப்புத் திட்டத்தை மத்திய அரசு தயார் செய்து வருகிறது.
சுஷ்மா ஸ்வராஜ்
பெண்களுக்கான தேசிய திட்டத்தை வெளியுறவு அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான கூட்டத்தில் பல முக்கியத் துறை அமைச்சர்கள் மூலம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இத்திட்டம் விரைவாக அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரி
இந்தியாவில் திருமணம் ஆகாத பெண்கள் வருமானத்தை ஈட்டும் பகுதியினர் 2001-2011ஆம் ஆண்டுக் காலத்தில் மட்டும் சுமார் 39 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆகவே இப்பிரிவினரை மேலும் ஊக்கப்படுத்த திருமணம் ஆகாத பெண்களின் வருமான வரி அளவைக் குறைக்க மத்திய அரசு சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான கூட்டம் ஆலோசனை செய்து வருகிறது.
வரி விலக்கு
மேலும் மாத விலக்குப் பாதுகாப்புக்கான பொருட்களுக்கு வரி விலக்கும், இந்தியாவின் அனைத்து இடங்களில் இதனைக் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் பெண்களுக்கான பொதுக் கழிப்பிடம் இதுவரை இல்லாத வகையில் அதிகளவில் அமைக்கவும், பாலின பிரிவினையால் ஏற்படும் வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்க மருத்துவம் முதல் சட்டம், ஆலோசனை மற்றும் தங்குமிடம் வசதிகள் வரை பெண்களுக்கு வழங்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
2030 இலக்கு
இத்தகைய நடவடிக்கையின் மூலம் நாட்டின் மொத்த பெண்கள் மக்கள்தொகையில், 50 சதவீதத்தை வருமானம் ஈட்டும் பிரிவினராக உருவாக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...