பருவமழை பொய்த்ததால், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக
காணப்படுகிறது. குறிப்பாக, சென்னை, வேலூர், சேலம், மதுரை, திருச்சி
உள்ளிட்ட பகுதிகளில் 100 ஃபாரன்ஹீட்டுக்கு வெயிலில் கொளுத்தி எடுத்து
வருகிறது. முக்கியமாக, சென்னையில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி
வதைத்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று சூறைக்காற்று அடித்து வருகிறது. சில பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பாம்பன் கடல் பகுதியில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வரை சூறைக்காற்று வீசுவருகிறது. ராமேஸ்வரத்தில் கடந்த 4 மணி நேரமாக பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் சென்னை மற்றும் மதுரை செல்ல வேண்டிய ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் அரசு பள்ளி வளாகம் மற்றும் ரயில் நிலையத்தில் மரங்கள் முறிந்து விழுந்தன.
அதேபோல், திருச்சி, தேனி, தூத்துக்குடி, நாமக்கல், விழுப்புரம், திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...