அனைத்து பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டு முதல், தினமும் கூட்டு
பிரார்த்தனை நடத்த, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன்
உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளில், தினமும் காலையில், பிரார்த்தனை கூட்டம் நடப்பது வழக்கம். 2011 முதல், இந்த முறை கைவிடப்பட்டது. பின், வாரம் ஒரு நாள் மட்டும் கூட்டு பிரார்த்தனை நடந்தது.
பல பள்ளிகளில், வகுப்பு பிரார்த்தனையே நடத்தப்படவில்லை.
தனியார் பள்ளிகளில், தினமும் வகுப்பறையிலும், மைதானத்திலும் பிரார்த்தனை நடத்துகின்றனர். அதனால், மீண்டும் அரசு பள்ளிகளிலும், தினசரி பிரார்த்தனை நடத்த, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். வரும் கல்வி ஆண்டு முதல், இதை அமல்படுத்த வேண்டும் என,
பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை செயலர் அறிவுறுத்தி உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...