‘வருமான வரிதானே... பிப்ரவரி மாதம் வரட்டும்; பார்த்துக்கொள்ளலாம்’
என்றுஎண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது.
காரணம், அப்போது வருமானம் குறைவு. எனவே, வரி செலுத்தவேண்டிய கட்டாயம் பலருக்கும்இல்லை. ஆனால் இப்போது கால ஓட்டமும், ஊதிய நிலைகளில்
காரணம், அப்போது வருமானம் குறைவு. எனவே, வரி செலுத்தவேண்டிய கட்டாயம் பலருக்கும்இல்லை. ஆனால் இப்போது கால ஓட்டமும், ஊதிய நிலைகளில்
ஏற்பட்ட மாற்றமும் சேர்ந்து, பணியாளர்களுக்கான சம்பளத்தைக் குறிப்பிடத்தக்க
அளவுக்கு உயர்த்தியுள்ளதால், வரி கட்ட வேண்டிய நிலைக்குபலரும்
உயர்ந்துள்ளனர்.
அரசு ஊழியர்களில் பலர் இப்போது வருமான வரி கட்டுபவர்களாக
மாறியிருக்கிறார்கள். தமிழக அரசு ஊழியர்களுக்குப் பரிசீலனையில் உள்ளஊதியச்
சீரமைப்புக்குழு அறிக்கை நடைமுறைக்கு வரும்போது, இன்னும் பலர்வரி
வட்டத்துக்குள் வந்துவிடக்கூடும். முன்பு ஆண்டுக்கொருமுறை கட்டியவருமான
வரியை தற்போது மாதம்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கீடுசெய்ய வேண்டிய
நிலைக்கு வந்துவிட்டோம்.
ஊதியமும் ஓய்வூதியமும் ஒன்றே
வருமான வரிக் கணக்கீட்டைப் பொறுத்தவரை, ஊதியமும், ஓய்வூதியமும்ஒன்றுதான்.
மூத்தக் குடிமக்களுக்கான வருமான வரி வரம்பு வேறுபடும்.அதுவும் ஐந்து லட்சம்
ரூபாய்க்கு மேற்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்குவரி விகிதம் ஒரே
மாதிரியே இருக்கும்.
பணியில் உள்ள ஊழியருக்கு, அவருக்குச் சம்பளம் வழங்கும் அலுவலர்ஒவ்வொரு
நிதியாண்டுக்கான வருமான வரியைக் கணக்கிட்டு டிடிஎஸ்பிடிப்பார். ஓய்வு
பெற்று ஓய்வூதியம் பெற ஆரம்பித்தபிறகு, ஓய்வூதியம்வழங்கும் அலுவலர் வருமான
வரியைக் கணக்கிட்டு வரி பிடிப்பார்.
சார்நிலைக் கருவூல அலுவலர், உதவிக் கருவூல அலுவலர், மாவட்டக் கருவூலஅலுவலர்
எனப் பதவிப் பெயர்கள் பலவாக இருப்பினும், சம்பளம் மற்றும்ஓய்வூதியம்
வழங்கும் வேலையை இந்த அலுவலர்கள் செய்து வருகின்றனர்.சென்னையைப்
பொறுத்தவரை, ஓய்வூதியம் வழங்குவதற்கென்றே அலுவலர்உள்ளார்.
இருவகை வருமான வரிக் கணக்கீடு
டியூ பேசிஸ் (Due basis) மற்றும் டிரான் பேசிஸ் (Drawn basis) என இருவகையாக
வருமான வரி கணக்கிடப்படக்கூடும். அதாவது, ஒரு நிதியாண்டுமுழுக்க ஒருவர்
பெறக்கூடிய அனைத்து வருவாய் இனங்களையும் கணக்கிட்டு,அதற்கான வருமான வரியை
மார்ச் தொடங்கி பிப்ரவரி முடிய 12 மாதசமதவணைகளில் பிடித்தம் செய்வது டியூ
பேசிஸ். வருமான வரியைக் கணக்கிடமுடியாத இனங்கள், நிலுவை வரவுகள் போன்றவை
முன்பே கணக்கில்எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தால், அவற்றைப் பட்டுவாடா
செய்யும்போதுவரியைப் பிடித்து விடுவது டிரான் பேசிஸ்.
டியூ பேசிஸ் அல்லது டிரான் பேசிஸ் இவற்றுள் எது முன்போ, அப்போதே வரிப்பிடித்தம் செய்ய வேண்டும் என்பதே டிடிஎஸ் விதிமுறை.
இவ்வாறு செய்வதால், ஒரு குறிப்பிட்ட தேதியில் வரி
செலுத்தவேண்டியவரிடமிருந்து பிடித்தம் செய்ய வேண்டிய வரி, நிலுவை
இல்லாமல்அரசுக் கணக்கில் போய்ச் சேர்ந்துவிடும்.
ஓய்வு பெறுவோர்
பணியிலிருந்து ஓய்வு பெறுவோர், 1. பணிக்கொடை, இறப்புப் பணிக்கொடைமற்றும்
ஓய்வுப் பணிக்கொடை, 2. ஓய்வூதியம் கணக்கீடு, 3. ஈட்டிய விடுப்புஒப்படை
ஊதியம், 4. சொந்தக் காரணங்களுக்கான ஈட்டாத விடுப்பு ஊதியம்ஆகிய நான்கு பணப்
பயன்களைப் பெறுவார்கள். இவற்றுள் முதல் மூன்றுஇனங்கள் வருமான வரி
விலக்குப் பெற்றவை. நான்காவது இனமாக உள்ளமூன்று மாத கால ஈட்டாத விடுப்பு
ஊதியம், வருமான வரிக்கு உட்பட்டது.எனவே, பணியிலிருந்து ஓய்வு பெறுவோருக்கான
வருமான வரிக் கணக்கீடுபின்வருமாறு அமையும்.
ஊழியர் ஒருவர் 28.02.2018 அன்று ஓய்வு பெற உள்ளதாகவைத்துக்கொள்வோம்.
2017-2018-க்கான இவரது வருமான வரியை மார்ச்2017-லேயே கணக்கிட வேண்டும்.
அந்தக் கணக்கீடு பின்வருமாறு இருக்கும்.
1. மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை பெற உள்ள ஊதியம், 2. மார்ச்
2018அன்று பெறத்தக்க மூன்று மாத கால ஈட்டாத விடுப்பு ஊதியம்.
மேற்கண்டஇரண்டு இனங்களின் கூட்டுத் தொகைக்கு வரியைக் கணக்கிட்டு, மார்ச்
2017முதல் பிப்ரவரி 2018 முடிய சம்பளம் வழங்கும் அலுவலர் பிடிக்க வேண்டும்.
மார்ச் 2018 முதல் அவர் ஓய்வூதியம் பெற ஆரம்பித்துவிடுவார். அப்போது,
2018-19-ம் நிதியாண்டுக்கான வருமான வரியானது, அவர்
பெறப்போகும்ஓய்வூதியத்தின் கூட்டுத்தொகைக்குக் கணக்கிடப்பட்டு, ஓய்வூதியம்
வழங்கும்அலுவலரால் பிடித்தம் செய்யப்படும்.
இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். இன்னொரு ஊழியர் 31.10.2017 ல்ஓய்வு
பெறுவதாக வைத்துக்கொள்வோம். 2017-2018-ம் ஆண்டுக்கான இவரதுவருமான வரிக்
கணக்கீடு, பின்வரும் இனங்களின் கூட்டுத் தொகைக்குரியதாகஇருக்கும்.
1. மார்ச் 2017 முதல் அக்டோபர் 2017 வரை பெறப்போகும் ஊதியம், 2.நவம்பர்
2017 முதல் பிப்ரவரி 2018 வரை பெற உள்ள ஓய்வூதியம், 3. 1.11.2017 அன்று
பெறத்தக்க மூன்று மாத கால ஈட்டாத விடுப்பு ஊதியம்.இதற்கான வருமான வரி, 12
சம தவணைகளில் மார்ச் 2017 ஊதியம்தொடங்கிப் பிடித்தம் செய்யப்படும்.
21.11.2017 அன்று அவர் பணியிலிருந்து விடுபட்டு செல்லும்போது,அக்டோபர் 2017
வரையிலான காலத்தில் அவரிடமிருந்து பிடித்தம்செய்யப்பட்ட வரி மற்றும்
நிலுவையாக உள்ள வரி பற்றிய சான்று ஒன்றைசம்பளம் வழங்கும் அலுவலர் வழங்க
வேண்டும். இந்தச் சான்றின்அடிப்படையில், மீதமுள்ள வருமான வரி இவரது
ஓய்வூதியத்திலிருந்து,ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால் பிடித்தம்
செய்யப்படும்.
தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களினால் இவரது ஈட்டாத விடுப்பு
ஊதியத்தொகையை முன்கூட்டியே கணக்கிட முடியாதபோது, விடுப்பு ஊதியம்
தவிர்த்துமற்ற இடங்களின் மீதான வரியைக் கணக்கிட்டுப் பிடித்தம்
செய்யப்படும்.பின்னர், விடுப்பு ஊதியம் கணக்கிடப்பட்டு வரி
சீரமைக்கப்படும். அல்லது காலம்தாழ்ந்து விடுப்பு ஊதியம் வழங்கப்படுமானால்,
அப்போதே வரி பிடித்தம்செய்யப்படும். விடுப்பு ஊதியம் மூன்று மாதங்களுக்குக்
குறைவாகவும்இருக்கலாம்.
மறுவேலைவாய்ப்பு
ஆசிரியர்களுக்கு மறுவேலை வாய்ப்பு (Re-Employment) என்ற சலுகைஉண்டு.
அதாவது, ஓர் ஆசிரியரின் ஓய்வு பெறும் நாள் 31.12.2017 என்றுவைத்துக்
கொள்வோம். மற்ற அரசு ஊழியர் களைப் போல் ஓய்வுபெற்ற அன்றேஆசிரியர்,
பணியிலிருந்து விடுவிக்கப் பட்டுச் சென்றுவிடுவது கிடையாது.
ஓய்வு பெறும் மாதம் எதுவாக இருந்தாலும், ஆசிரியர்கள் அந்த
கல்வியாண்டின்கடைசி நாள் வரை பணியில் தொடர அனுமதிக்கப் படுகிறார்கள்.
கல்வியாண்டுஎன்பது ஜூன் முதல் நாள் தொடங்கி மே 31 வரை ஆகும்.
இதன்படிமேற்சொன்ன ஆசிரியர் 31.12.2017 அன்று ஓய்வு
பெற்றிருந்தாலும்01.01.2018 முதல் 31.05.2018 முடிய பணியில் தொடர்ந்து
நீடிப்பார். இதுஅவரது மறுவேலை வாய்ப்புக் காலம் ஆகும்.
மறுவேலைவாய்ப்புக் கால ஊதியம் என்பது, அவர் ஓய்வுபெற்ற கடைசிமாதமான 2017
டிசம்பரில் பெற்ற ஊதியத்திலிருந்து, 01.01.2018 முதல் அவர்பெறப்போகும்
ஓய்வூதியத்தைக் கழித்தால் கிடைப்பது. இன்னும் சுருக்கமாகச்சொல்வதென்றால்,
ஒருவர் ஜனவரி 2018-ல் பெறப்போகும் மறுவேலைவாய்ப்புஊதியமும், ஜனவரி 2018-ல்
பெற உள்ள ஓய்வூதியமும் சேர்த்துதான் டிசம்பர்2017-க்கான அவரது ஊதியம்
ஆகும். அதன்படி 2017-2018 நிதியாண்டுக்கானஅந்த ஆசிரியரின் வருமான வரி,
பின்வரும் இனங்களின் கூட்டுத் தொகைக்குக்கணக்கிடப்பட வேண்டும்.
1. மார்ச் 2017 முதல் டிசம்பர் 2017 வரை பெறும் ஊதியம், 2. ஜனவரி 2018முதல்
பிப்ரவரி 2018 வரை பெறப்போகும் மறுவேலைவாய்ப்பு ஊதியம், 3.ஜனவரி 2018
பிப்ரவரி 2018 ஆகிய இரு மாதங்களுக்குரிய ஓய்வூதியம், 4.ஓய்வு பெற்ற
மறுநாளுக்குப்பின் அவர் பெறத்தக்க மூன்று மாத கால ஈட்டாதவிடுப்பு ஊதியம்.
இவற்றுக்கான வருமான வரி மார்ச் 2017 முதல் பிப்ரவரி2018 வரை சம்பளம்
வழங்கும் அலுவலரால் பிடித்தம் செய்யப்படும்.
இவர் 31.05.2018 வரை மறுவேலை வாய்ப்பில் - பணியில்
தொடர்வதால்2018-2019-க்கான வருமான வரிக் கணக்கீடும் இதே சம்பளம்
வழங்கும்அலுவலரால் கணக்கிடப்படக்கூடும். அது பின்கண்டவாறு இருக்கும்.
1. மார்ச் 2018 முதல் மே 2018 முடிய பெற உள்ள மறுவேலைவாய்ப்பு ஊதியம், 2.
ஏப்ரல் 2018 முதல் பிப்ரவரி 2019 வரை பெறப்போகும் ஓய்வூதியம்.
குறிப்பு: மறுவேலைவாய்ப்பு காலத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்துடன்
அகவிலைப்படி வழங்கப்படாது. மறுவேலை வாய்ப்பு முடிந்து, ஓய்வூதியம்மட்டும்
பெறும் ஜூன் 2018 முதல் ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி +மருத்துவப்படி
சேர்த்துத் தரப்படும். வரிசை எண் 1 + 2-ல் கண்ட தொகைக்குவரியைக்
கணக்கிட்டு, அதை 12 சம தவணைகளாக்கி மார்ச் 2018 முதல் மே2018 வரை, சம்பளம்
வழங்கும் அலுவலரே பிடித்தம் செய்துவிடுவார். ஜூன்2018 முதல் இவரது வருமான
வரிக் கணக்கீடு, இவர் ஓய்வூதியம் பெற தேர்வுசெய்துள்ள ஓய்வூதியம் வழங்கும்
அலுவலரால் மேற்கொள்ளப்பட்டு, பிடித்தம்செய்யப்படும்.
ஊதியம் + ஓய்வூதியம் + மறுவேலை வாய்ப்பு ஊதியம் + விடுப்புஊதியங்களை வருமான
வரிக்குக் கணக்கிட்டு, அதை 12 தவணைகளில் பிடித்தம்செய்ய வேண்டும் என்பதும்
கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை.அரசு ஊழியர்கள் இந்த வரிக்
கணக்கீடுகளைப் புரிந்து கொண்டால், வரிகட்டுவது சுமையாக இருக்காது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...