தொழில்நுட்ப பரிமாற்ற கருத்தரங்கில் பங்கேற்க ஊட்டி அரசு பள்ளி மாணவர்கள் ஜப்பான் செல்கிறார்கள்.
ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் வருகிற 28-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்த கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் இருந்து 5 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் ஊட்டி அரசு பள்ளியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் அருண், 10-ம் வகுப்பு மாணவர் கோகுல் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...