சென்னை: போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு, மாவட்ட தலைநகரங்களில், நாளை
நடக்கிறது.தமிழக போலீசில், இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள்
மற்றும் தீயணைப்போர் என, 15 ஆயிரத்து, 711 பணி இடங்களுக்கு, 6.32 லட்சம்
பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
அதிகபட்சமாக, சென்னையில், 45 ஆயிரத்து, 523 பேர்
விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு, மாவட்ட
தலைநகரங்களில், நாளை நடக்கிறது. இதற்காக, சென்னை உட்பட, 410 தேர்வு
மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 'பிட்' அடிப்போர் மற்றும் தில்லுமுல்லு
வேலைகளில் ஈடுபடுவோரை பிடிக்க, பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து, போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி
அளிக்கப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...