பஞ்சாப் மாநிலத்தில், பள்ளி மாணவன் ஒருவன்,
பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அடுத்து, வகுப்பிற்கு செல்லும்போது, மொபைல்
போன் எடுத்துச் செல்ல, பள்ளி ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், சண்டிகரில் உள்ள ஒரு அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன், வகுப்பில் பாடம் நடத்தும்போது, ஆசிரியரின் மொபைல் போனில் மணி ஒலிப்பதால், படிப்பதில் கவனச்சிதறல் ஏற்படுவதாக, பிரதமருக்கு கடிதம் மூலம் புகார் தெரிவித்திருந்தான்.
இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாநில கல்வித் துறைக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியது. இதையடுத்து, மாநில கல்வித் துறை, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ''அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், வகுப்பறை யில் மொபைல் போனை பயன்படுத்தக் கூடாது. ஆசிரியர்கள் வகுப்பிற்குள் செல்வதற்கு முன், தங்கள் மொபைல் போனை, வெளியில் வைத்து விட்டு செல்ல வேண்டும்.''இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...