டெஸ்க்டாப்பில் இருந்த கணினியின் பணிகளை இன்று நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களே செய்துவிடுகின்றன.
ஆனால், அந்தக் கணினியில் பணிகளைச் செய்வது போல எளிதாக போனில் மேற்கொள்ள முடியாது. உதாரணமாக, கணினியில் தமிழ் மொழியில் டைப் செய்வது எளிது. ஆனால் போனில் அதை டைப் செய்வது சிறிது கடினம். வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்களால் இந்த இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் பேசிக் மொபைலில், 3x4 கீ-போர்டில், எஸ்.எம்.எஸ் டைப் செய்து அனுப்பிக்கொண்டிருந்த நாம் இன்று QWERTY கீ-போர்டில் வாட்ஸ்அப்பிக் கொண்டிருக்கிறோம். மேலும் மின்னஞ்சல், குறுந்தகவல் என அலுவலக ரீதியான தகவல்கள் கூட ஸ்மார்ட்போன் மூலமாகவே நடைபெறுகின்றன. எனவே, நமது சொந்த விஷயங்களுக்காக இல்லாவிட்டாலும் கூட, அலுவலக ரீதியான விஷயங்களுக்காகவாவது மொபைலைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இதில் நாம் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு அம்சம் மொபைல் டைப்பிங்.
வாட்ஸ்அப் மெசேஜ், குறுஞ்செய்திகள், ஃபேஸ்புக் போஸ்ட், இரண்டு வரி ட்வீட் என எதுவாக இருந்தாலும் தற்போது மொபைலில்தான் பெரும்பாலும் டைப் செய்கிறோம். மொபைலில் புகுந்துவிளையாடும் இன்றைய ஜென் Z இளைஞர்களுக்கு இவை அனைத்தும் ஜூஜூபி மேட்டர். ஆனால், இன்னும் நிறையப் பேர் மொபைல் கீ-போர்டில் எழுத்துக்களைத் தேடித்தேடித்தான் டைப் செய்துகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு உதவவே இந்தக் கட்டுரை.
டைப்பிங் ஸ்டைல்:
முதலில் உங்களின் டைப்பிங் ஸ்டைல் என்ன என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள். சிலர் இடது கையில் மொபைலைப் பிடித்துக்கொண்டு, வலதுகை ஆள்காட்டி விரல் மூலம் டைப் செய்வார்கள்; சிலர் ஒரு கையில் டைப் செய்வார்கள்; சிலர் இரு கைகளிலும் மொபைலைப் பிடித்து டைப் செய்வார்கள்; இதில் ஒரே கையில் டைப் செய்வதுதான் எளிமையானது. பெரிய அளவிலான செய்திகளை டைப் செய்ய வேண்டுமானால் இரு கைகளிலும் பிடித்து டைப் செய்யலாம். இதன் மூலம் அனைத்து எழுத்துகளையும் விரைவாக டைப் செய்ய முடியும். ஒருவேளை உங்களுக்கு மற்ற ஸ்டைலில் இன்னும் விரைவாக டைப் செய்ய முடியும் என்றால், தாராளமாக அதையே தொடரலாம்.
ஆட்டோ கரெக்ஷன் ஆப்ஷன்கள்:
தங்கிலீஷுக்கும், இங்கிலீஷுக்கும் இடையேயான சிக்கல்களில் இதுவும் ஒன்று. ஆட்டோ கரெக்ஷன் ஆங்கில வார்த்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், தங்கிலீஷ் டைப்பிங் செய்யும்போது இந்த ஆப்ஷனை டிசேபிள் செய்துவிடுங்கள். ஆங்கிலம்தான் உங்கள் பிரதான மொழி என்றால் இது நல்ல ஆப்ஷன். வார்த்தைகளை பிழையின்றி அடிக்க உதவும். மேலும் எழுத்துக்களை டைப் செய்யும் போதே, வார்த்தைகளைக் காட்டும் 'Word Prediction' ஆப்ஷனையும் பயன்படுத்தலாம்.
கூகுள் ஜி-போர்டு:
உங்களின் ஆண்ட்ராய்டு கீ-போர்டிற்குள் ஒளிந்திருக்கும் குட்டி கூகுள்தான் இந்த ஜி-போர்டு. உங்களின் கூகுள் கீ-போர்டை அப்டேட் செய்தாலே போதும். இந்த வசதியைப் பயன்படுத்தலாம். வார்த்தைகளைக் கணிப்பது, வெவ்வேறு மொழிகளில் மாற்றி மாற்றி டைப் செய்வது, கீ-போர்டிற்குள்ளேயே கூகுள் சர்ச் ஆப்ஷன்கள் இருப்பது, GIF சர்ச் என அப்டேட் ஆன ஆண்ட்ராய்டு கீ-போர்டாக இருக்கிறது ஜி-போர்டு.
Glide Typing:
கூகுள் ஜி-போர்டில் இருக்கும் வசதிகளில் இதுவும் ஒன்று. மொபைல் கீ-போர்டின் மீது நீங்கள் டைப் செய்ய வேண்டிய வார்த்தைகளுக்கான எழுத்துகளின் மீது, விரல்களைக் கொண்டு சென்றாலே போதும்; வார்த்தைகள் தானாக டைப் ஆகிவிடும்.
வாய்ஸ் அசிஸ்டன்ட்கள்:
நீங்கள் ஒன்று சொல்ல, வாய்ஸ் அசிஸ்டன்ட் ஒன்று செய்தது எல்லாம் பழைய கதை ஆகிவிட்டது. முன்பை விடவும் நன்கு அப்டேட் ஆகிவிட்டன மொபைலின் வாய்ஸ் அசிஸ்டன்ட்கள். நீங்கள் வார்த்தைகளை உச்சரித்தாலே போதும்; வாய்ஸ் அசிஸ்டன்ட்கள் அதை சரியாக கேட்ச் செய்து வார்த்தைகளாக மாற்றி விடுகின்றன. இந்த வசதியும் கூகுள் ஜி-போர்டில் உண்டு. ஆனால் இந்த விஷயத்தில் உங்களின் வார்த்தை உச்சரிப்புதான் பாஸ் முக்கியம்!
தமிழ் டைப்பிங்?
முன்பை விடவும் இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம், தமிழ் மொழியில் உள்ளீடு செய்வதற்கான நல்ல மென்பொருள்கள் உருவானதே. எனவே, முன்னர் இருந்ததைப் போல தமிழ் டைப்பிங் தற்போது மொபைலில் கஷ்டமே இல்லை. தங்கிலீஷில் டைப் செய்வதை அப்படியே தமிழாக மாற்றிக் கொடுக்க நிறைய ஆப்ஸ்கள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை இன்ஸ்டால் செய்துகொண்டால் போதும். தமிழ் டைப்பிங்கும் மிக எளிது.
சரியான டைப்பிங் ஸ்டைல், நல்ல மொபைல் கீ-போர்டு ஆப், பிழையின்றி எழுத மற்றும் தமிழ் மொழிக்கான டூல்கள், அடிக்கடி டைப் செய்யும் பழக்கம் ஆகிய விஷயங்கள் இருந்தாலே போதும்; மொபைல் டைப்பிங் கடினம் என நினைப்பவர்கள் கூட, வேகமாக டைப் செய்யலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...