தமிழகத்தில் பட்டதாரிகளுக்கு
கோடை விடுமுறையில் நடத்தப்படவிருந்த அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட
(ஆர்.எம்.எஸ்.ஏ.)பயிற்சி இடைக்காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (ஆர்.எம்.எஸ்.ஏ.) சார்பில்
6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி
ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்
பாடங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இந்தப் பயிற்சி
திங்கள்கிழமை (மே 8) முதல் மே 12-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறவுள்ளதாக
அறிவிக்கப்பட்டிருந்தது.
கொளுத்தும் வெயில், குடும்பத்துடன் கோடை விடுமுறையைக் கொண்டாட இயலாத நிலை ஏற்படும் உள்ளிட்ட காரணங்களைக் கூறி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழக தமிழாசிரியர் கழகம், ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம், தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து இந்தப் பயிற்சி இடைக்காலமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...