தமிழக அரசு சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ
மாணவியர் அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கும்
நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
இதற்கான அறிவிப்பை பள்ளி கல்வித் துறை செயலர்
வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை“மாநிலக்
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அனைவருக்கும்
இடைநிலைக் கல்வி இயக்கம் இணைந்து நடத்தும் பத்தாம் வகுப்பு மற்றும்
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான""உயர்கல்விவழிகாட்டி
நிகழ்ச்சி"" 20/05/2017 (சனி) அன்று காலை 09.30 மணியளவில், கிண்டி
பொறியியல் கல்லூரி, விவேகானந்தர் அரங்கம், அண்ணா பல்கலைக்கழக
வளாகம்,சென்னை-25இல் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு அனுமதி
இலவசம்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலில் வருபவர்களுக்கு இருக்கை வசதியில் முன்னுரிமை அளிக்கப்படும்.மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என பள்ளி கல்வித் துறை செயலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...