_நீட் தேர்வுக்கு காலதாமதமாக வந்த மாணவர்களுக்கு தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் கண்ணீருடன்திரும்பிச் சென்றனர்._
_தருமபுரி மற்றும் ஓசூரில் இருந்து 2 மாணவிகள் உட்பட 3 பேர் சேலம் மூன்று
ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வுஎழுத வந்தனர். 5
நிமிடங்கள் காலதாமதமாக வந்ததால் அவர்கள் தேர்வு எழுத அனுமதி
மறுக்கப்பட்டது. இதனை அடுத்து_
_மாணவர்களும் சக மாணவர்களின் பெற்றோரும் தேர்வு மைய அதிகாரிகளிடம் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்._
_ஆனால் அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளி முன்
சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி போராட்டத்தை
கைவிடச்செய்தனர். எனினும் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவர்கள்
மூவரும் கண்ணீரோடு திரும்பிச் சென்றனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...