இந்தக் கல்வியாண்டு (2017-18) பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக்
கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க
திங்கள்கிழமை (மே 1) முதல் ஆன்-லைன் மூலம்
பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆன்லைன் முகவரி
www.annauniv.edu ஆகும். அவ்வாறு ஆன்-லைன் மூலம் பதிவு செய்த
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரிலோ அல்லது
தபால் மூலமோ சமர்ப்பிக்க ஜூன் 3 கடைசித் தேதியாகும் அரசு, அரசு உதவிபெறும்,
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு (பி.இ.) சேர்க்கைக்கான
ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. 2017-18
கல்வியாண்டுக்கான கலந்தாய்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் அண்மையில்
வெளியிட்டது. அதன்படி, பொறியியல் கலந்தாய்வு ஜூன் 27-ஆம் தேதி தொடங்கப்பட
உள்ளது. முதலில் விளையாட்டுப் பிரிவினர், ராணுவ வீரர்களின் குழந்தைகள்,
மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கும் பின்னர் பொதுப்
பிரிவினருக்கும் சேர்க்கை நடைபெறும். முக்கியத் தேதிகள் குறித்த விவரம்
ஆன்-லைன் பதிவு தொடக்கம் மே 1 ஆன்-லைன் பதிவுக்கு கடைசி நாள் மே 31
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 3 சமவாய்ப்பு எண் வெளியீடு ஜூன்
20 தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஜூன் 22 கலந்தாய்வு தொடங்கும் நாள் ஜூன்
27. Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» பி.இ. மாணவர் சேர்க்கை: இன்று முதல் ஆன்-லைன் பதிவு தொடக்கம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...