தனியார் பள்ளிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான பணிகள் துவங்கி உள்ளன. தமிழகத்தில்,
கட்டாய இலவச கல்வி உரிமை சட்டப்படி, சுயநிதி தனியார் பள்ளிகளுக்கான கல்வி
கட்டணம் நிர்ணயிக்க, கமிட்டி அமைக்கப்பட்டது. இதன் தலைவராக இருந்த, உயர்
நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, சிங்காரவேலுவின் பதவிக்காலம் முடிந்தது.
அவர், 2016 - 17ம் கல்வி ஆண்டு வரை, 12 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு
கட்டணம் நிர்ணயித்திருந்தார்.
இந்நிலையில், கல்வி கட்டண கமிட்டியின் புதிய தலைவராக, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, மாசிலாமணி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், புதிய கல்வி ஆண்டுக்கான, கட்டண நிர்ணய பணிகளை துவக்கி உள்ளார். இரு வாரங்களுக்கு முன், தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகார கடிதம், அடிப்படை கட்டமைப்பு, வரவு - செலவு கணக்குகளை தாக்கல் செய்ய, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. அதன்படி, மே, ௮ முதல், பள்ளிகள் தரப்பில், விபரங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.
முதலில், சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. பள்ளி முதல்வர்கள், முக்கிய நிர்வாகிகளை அழைத்து விசாரித்து, கட்டணம் நிர்ணயிக்கப்படும். அதை தொடர்ந்து, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...