அரசு ஆங்கில வழி பள்ளிகளில் படிப்போர், வரும் 2018-19
கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு
பாடம் நடத்த, பிரத்யேக ஆசிரியர்கள் நியமித்தால் மட்டுமே, மொழித்திறன்
மேம்படும் வாய்ப்பு உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக,
அரசுப்பள்ளிகளில்
ஆங்கில வழி வகுப்புகள், 2012 -13 கல்வியாண்டில் துவங்கப்பட்டது.
தமிழகத்தில், 3,400 ஆங்கில வழி அரசு, அரசு உதவிபெறும்
பள்ளிகளில், 3.32 லட்சம் மாணவர்கள் படிக்கின்றன. இதில், 2014 -15
கல்வியாண்டில், ஆறாம் வகுப்பில் ஆங்கில வழி துவங்கிய போது சேர்ந்த
மாணவர்கள், வரும் 2017-18 கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்புக்கு
செல்கின்றனர்.
அடுத்த கல்வியாண்டில், பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். எட்டாம்
வகுப்பு வரை, ’ஆல்பாஸ்’ முறை பின்பற்றப்படுவதால், ஆங்கில வழி மாணவர்களுக்கு
பாதிப்பில்லை. இவர்களுக்கு, தமிழ்வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களே
வகுப்பு கையாள்கின்றனர்.
பல அரசுப்பள்ளிகளில், தமிழ்வழியில் படிப்போர் எண்ணிக்கை
குறைவாக இருப்பதால், இரு வழிகளில் படிப்போரையும் சேர்த்து, பாடம்
நடத்தப்படுகிறது. இதனால், ஆங்கில மீடியம் படிப்போரின், மொழித்திறன் மேம்பட
வாய்ப்பில்லை. பொதுத்தேர்வில், அரசு ஆங்கில வழி மாணவர்கள், பின்தங்கும்
அபாயம் உள்ளதாக, புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க
மாநில ஆலோசகர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,”அரசுப்பள்ளிகளில், ஆங்கில வழி
வகுப்புகள் துவங்கப்பட்டதால், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
இவர்களுக்கு, தமிழ்வழியில் பாடம் நடத்தும் ஆசிரியரே, வகுப்பு
கையாள அனுமதித்தால், அதிக பணிச்சுமை ஏற்படும். பாடத்திட்ட அழுத்தத்ததை
கருத்தில் கொண்டு, அரசு ஆங்கில வழிப்பள்ளிகளுக்கு, புதிதாக ஆசிரியர்கள்
நியமனம் செய்தால், வேலையில்லாமல் திண்டாடும் பட்டதாரிகளும் பலனடைவர்.
பொதுத்தேர்விலும், அரசு ஆங்கில வழி மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற
முடியும்,” என்றார்.
Thank u
ReplyDelete