கொளுத்தும் வெயில் காரணமாக, வேலை உறுதியளிப்பு திட்ட பணி நேரத்தை மாற்றியமைத்து, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சொந்த ஊரில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவும், தேசிய வேலை உறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டது. முதலில், கிராமங்களில் உள்ள குளம், குட்டைகள் துார் எடுப்பதாக துவங்கிய பணி, பின், பொது இடங்களை சுத்தப்படுத்துவது, பண்ணைக்குட்டை அமைப்பது, சமுதாய கழிப்பிடம் என, மாற்று பணிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் வழக்கத்தை விட வெயில் கொளுத்துவதால், காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை உள்ள வேலை நேரத்தை, மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இதன்படி, இனி வரும் நாட்களில், காலை, 8:00 மணிக்கு பணி துவங்குகிறது; மதியம், 12:00 மணி முதல், 2:00 மணி வரை, மதிய உணவு இடைவேளை; மதியம், 2:00 மணி முதல், 5:00 மணி வரை பணி வழங்க, தமிழக அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இந்த மாற்றம், நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...