கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான கவுன்சிலிங், மருத்துவ
கவுன்சிலிங்கை ஒட்டி நடத்தப்பட உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு கால்நடை
மருத்துவப் பல்கலைக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக கால்நடை அறிவியல் பல்கலையில், கால்நடை இளங்கலை;
உணவு தொழில்நுட்பம்; பால் தொழில்நுட்பம்; கோழியின வளர்ப்பு போன்ற, நான்கு
படிப்புகள் உள்ளன. இப்பல்கலையில், www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில்,
மே, 31 வரை, பட்டப் படிப்புகளில் சேர, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்து, புகைப்படம் ஒட்டி, சான்றிதழ் நகல்களை
இணைத்து, 'தலைவர், சேர்க்கைக் குழு, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலை,
மாதவரம் மில்க் காலனி, சென்னை - 51' என்ற முகவரிக்கு, ஜூன், 6க்குள் அனுப்ப
வேண்டும். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,
படிப்புக்கான கவுன்சிலிங் முடிந்த பின் நடத்தப்படும். சிலர், அங்கு இடம்
கிடைத்ததும், இங்கிருந்து போய்விடுகின்றனர். அதனால், சிக்கல் ஏற்படுவதை
தடுக்கவே, இந்த ஏற்பாடு.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Nice
ReplyDelete