அண்ணா பல்கலையில், வெளிநாட்டினருக்கான, இன்ஜி., மாணவர் சேர்க்கை
அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலை, இன்ஜி., கல்லுாரிகளில், உள்நாட்டு
மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தனித்தனியே, மாணவர் சேர்க்கை
நடத்தப்படுகிறது.
பி.இ., - பி.டெக்., மற்றும் எம்.எஸ்சி., ஐந்தாண்டு படிப்புகளுக்கு,
வளைகுடா நாடுகளில் பணியாற்றுவோரின் குழந்தைகள், வெளிநாட்டில் வாழும்
இந்தியர் மற்றும் வெளிநாட்டினர், ஜூன், 20 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வெளிநாட்டினருக்கு, ஜூன் 28; வளைகுடா நாடுகளில் பணியாற்றுவோரின்
குழந்தைகள் மற்றும் வெளிநாட்டில் வாழ் இந்தியர்களுக்கு, ஜூன், 29லும்,
கவுன்சிலிங் நடக்கும்
எம்.இ., - எம்.டெக்., மற்றும் எம்.எஸ்சி., இரண்டு ஆண்டு படிப்புகளுக்கு,
ஜூலை, 20 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஜூலை, 28ல் கவுன்சிலிங்
நடத்தப்படும். கூடுதல் விவரங்களை, https://www.annauniv.edu/ என்ற
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...