Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கொளுத்தும் கோடையில் மழைக்கு வாய்ப்பு !!

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் அளித்த பேட்டி: வளிமண்டலத்தில் மேற்கு, கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தமிழகத்தில் நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில், திருச்சி, தஞ்சாவூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருச்சி மாவட்டம்
புல்லம்பாடியில் 7 செ.மீ., மழையும், திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் 6 செ.மீ., மழையும் பெய்துள்ளது.
அடுத்த 2 நாட்களில் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் லேசான மழை பெய்யும்.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும். கடலோர பகுதிகளில் வெயில் 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் பதிவாகும். உள்மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive