சிவகங்கையில் நடந்த ஆசிரியர் கவுன்சலிங்கில் சர்வர் பிரச்னையால் பணி
உத்தரவு பெற முடியாமல் ஆசிரியர்கள் தவித்தனர். ஆண்டுதோறும் மே மாதத்தில்
அரசுப்பள்ளி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கவுன்சலிங்
நடத்தப்படும்.
சில
ஆண்டுகளாக பள்ளி திறந்தவுடன் தாமதமாக கவுன்சலிங் நடத்தப்பட்டது.
நடப்பாண்டில் மே மாதம் விடுமுறை காலத்திலேயே நடத்தப்படும் என
அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் கவுன்சலிங் தொடங்கியது.
சிவகங்கையில் மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக எஸ்எஸ்ஏ
அலுவலகத்தில் நேற்று காலை, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு
மற்றும் இடமாறுதல் கவுன்சலிங் நடந்தது. இதில் 11 பேர் பணி உத்தரவு
பெற்றனர். பிற்பகலில் ஒன்றியத்திற்குள் மாறுதல் பெற வேண்டிய பட்டதாரி
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சலிங் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு
கவுன்சலிங் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான சர்வர்
இரவு 7 மணி வரை செயல்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் 70க்கும் மேற்பட்டோர்
இரவு வரை உத்தரவு பெற முடியாமல் தவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...