ஜூலை மாதம் நடைமுறைக்கு வர உள்ள சரக்கு மற்றும் சேவை வரியில் தொலைத்தொடர்பு சேவைகள், நிதி, வங்கிச் சேவைகள் செல்போன்கள் விலை கடுமையாக உயரும்.
தொலைத்தொடர்பு சேவைகளுக்கு 18 சதவீதம் வரியும், செல்போன்களுக்கு 12 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் வரும் ஜூலை மாதம் முதல் மிகப்பெரிய வரிச்சீர்திருத்தத்தை சந்திக்க உள்ளது. அனைத்து நேரடி மறைமுக வரிகள் நீக்கப்பட்டு, சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதில் தொலைத்தொடர்பு, வங்கிச்சேவைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவைகளுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச வரியால் மத்திய அரசின் டிஜிட்டல் இந்திய, டிஜிட்டல் பேமெண்ட் திட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
நுகர்வோர்களுக்கு செல்போன்கள் சேவைகள்,மொபைல் கட்டணம், கால்களுக்கான கட்டணம் ஆகியவை அதிகரிக்கும். தற்போது வரி, மற்றும் கூடுதல் வரியாக செல்போன் நிறுவனங்களுக்கு 12 சதவீதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ள நிலையில் இது 18 சதவீதமாக அதிகரிக்கும். மேலும், டிஜிட்டல்பேமேண்ட்களுக்கும் சேவை கட்டணமும் கடுமையாக உயரும்.
நிதிச்சேவைகளைப் பொருத்தவரை வங்கிகள் இனி தங்களின் சேவைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கும். தற்போது வங்கிகள் சேவைவரியாக 15 சதவீதம் மட்டுமே வசூலித்து வருகின்றன இனி, இது 18 சதவீதமாக உயரும். மேலும், தனியார் நிதிநிறுவனங்களில் கடன் பெறுவது, நகை அடகுவைத்தல் போன்றவற்றுக்கும் 18 சதவீதம் சேவை வரி விதிக்கப்படும்.
செல்போன்கள்.
ஜூலை மாதத்தில் இருந்து மொபைல் போன்கள் விலை அதிகரிக்கும் செல்போன்களுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செல்போன்கள் விலை குறையும், அதேசமயம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செல்போன்கள் விலை அதிகரிக்கும்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செல்போன்களுக்கு 27 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருந்த நிலையில், இனி 12 சதவீதம் மட்டுமே ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். இதனால் வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டசெல்போன்கள் விலை குறையும்.
அதேசமயம், உள்நாட்டில்தயாரிக்கப்பட்ட செல்போன்களுக்க 5சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்பட்ட நிலையில், இனி 12 சதவீதம் வரி செலுத்த வேண்டியது இருக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...