சென்னை: பிளஸ் 2 தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ.,
தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடியாக,
இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பில் சேரலாம்.
அதற்கான விண்ணப்பப் படிவங்கள், நாளை முதல், 30ம் தேதி
வரை, அரசு அறிவித்துள்ள பாலிடெக்னிக் கல்லுாரிகளில் வழங்கப்படும்.சென்னை,
தரமணி, மத்திய அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், இரண்டரை ஆண்டு செயற்கை
அவயங்கள் மற்றும் முடநீக்கியல் பட்டயப் படிப்பிற்கான, முதல் ஆண்டு
சேர்க்கை; தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில், ஓராண்டு
ஒப்பனைக்கலை பட்டயப் படிப்பிற்கான சேர்க்கைக்கும், விண்ணப்பம்
வரவேற்கப்படுகிறது.விண்ணப்பத்தை, www.tndte.gov.in என்ற இணையதளத்தில்
இருந்தும், பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், அந்தந்த
பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, மே, 30க்குள் சென்றடைய வேண்டும்.
All B.E M.E B.Ed M.Ed admission for contact sivanathan 9942799662
ReplyDelete