Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விக்கல் ஏன் வருகிறது? 'விக்கல்’ நிற்க என்ன செய்யலாம்?...

        விக்கல்எப்போது வரும் என்றே தெரியாது. சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென விக்கல்எடுக்கும், சில சமயங்களில் இதுஆபத்தில் கூட முடியும், மூச்சுக்குழாயில் உணவு சென்று அடைத்துக்கொண்டால் உயிருக்கே ஆபத்தாகும் வாய்ப்புகள் உண்டு.

        பெரியவர்கள்விக்கல் எடுத்தால், யாரோ நினைக்கின்றனர் என்றுகூறுவர். ஆனால், விக்கல் ஏற்படுவதற்குபல காரணங்கள் உண்டு. குறிப்பாக இரைப்பையில்அமிலத்தன்மை அதிகரிப்பது தான் இதற்கான முக்கியக்காரணம்.

     பொதுவாக, விக்கல் வரும்போது அதை நிறுத்த அருகில்போய் பயமுறுத்துவோம். உடனே விக்கலும் நின்றுவிடும். பயமுறுத்துதல்தான் விக்கலுக்குத் தீர்வா? விக்கல் ஏன்வருகிறது?  விக்கல் வந்தால், என்னசெய்ய வேண்டும்?

விக்கல்ஏன் வருகிறது?
“நெஞ்சுப்பகுதியையும் வயிற்றையும் பிரிக்கும் வகையில் உதரவிதானம் (Diaphragm) என்ற தசைஇருக்கிறது.  அதில் ஏற்படும் துடிப்புதான்விக்கலாக நமக்குத் தெரிகிறது. அவ்வாறு துடிப்பு ஏற்படும்போது, நுரையீரல் சுருங்கி விரியும் செயல்பாட்டில், சிறு மாற்றம் உண்டாகிதொண்டையின் குரல் நாளம் வழியாகசத்தத்துடன் விக்கல் வருகிறது. உணவைவேகமாகச் சாப்பிடும்போதும், வயிறு நிரம்பச் சாப்பிடும்போதும், வாயுக்கள் நிறைந்த பானங்களை அருந்தும்
போதும், மது குடிக்கும்போதும் விக்கல்வருகிறது.  இது சில நிமிடங்கள்வரை நீடித்துவிட்டு, பிறகு நின்றுவிடும். இதற்குப்பயப்படத் தேவை இல்லை.”
பயமுறுத்தினால்விக்கல் நிற்பது ஏன்?
“பயமுறுத்தும்போது, அதிர்ச்சியில் சில நொடிகளுக்கு அனைத்துஉள் உறுப்புகளும் ஒரு நிலையில் அதிர்வதால்நரம்பு மண்டல இயக்கம், சுவாசம், நுரையீரலின் இயக்கம் ஆகியவை நின்றுமீண்டும் செயல்படுகின்றன.  இதனால் விக்கல் நிற்கிறது. ஆனால், இது சரியான முறைஅல்ல. இதைப் பின்பற்றவும் கூடாது.”
தீர்வு?
“விக்கல்வரும்போது, மெதுவாக நீர் அருந்துவது, ஒரு ஸ்பூன் சர்க்கரையைச் சாப்பிடுவது, 10-20 நொடிகள் வரை மூச்சை இழுத்துப்பிடித்துவிட்டு, பின்பு, மூச்சை மெதுவாகவெளியிடுவது போன்ற செயல்களைச் செய்யலாம். ஆனால், தொடர்ந்து ஒரு நாளுக்கு மேல்விக்கல் வந்துகொண்டே இருந்தால், அதைச் சாதாரணம் எனஎண்ணி, கவனக்குறைவாக இருத்தல் கூடாது.
பாலிதீன்பைக்குள் சில நொடிகள் சுவாசிப்பதும்இதற்குத் தீர்வாக அமையும்.
ஏனெனில், பாலிதீன் பைக்குள் இருக்கிற ஆக்சிஜன் சிறிது நேரத்தில் தீர்ந்துபோய்கார்பன் டை ஆக்ஸைடையே சுவாசிக்கநேரும்போது விக்கல் நிற்கும்.
இதுபோன்றமுதலுதவிகளுக்கு விக்கல் கட்டுப்படவில்லையென்றால் மருத்துவத் தீர்வைநாடுவது நல்லது. பொதுவாகவே நம்உணவு முறையில் அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுப்பொருட்களைத்தவிர்க்க வேண்டும்
உணவுக்குழாயில்பிரச்னை, வயிறு தொடர்பான பிரச்னை,  நிமோனியா, மூளையில் கட்டி,  பின் மூளையில் பக்கவாதம்ஏற்படுதல், உடலில் சோடியத்தின் அளவுகுறைதல், சிறுநீரகத்தில் குறைபாடு போன்ற பிரச்னைகளின் அறிகுறியாகவும்விக்கல் இருக்கலாம்.  எனவே, தொடர் விக்கலுக்குமருத்துவரிடம் செல்வதுதான் சரி.

90 சதவிகிததொடர் விக்கல் பிரச்னைக்குக் குடல்தொடர்பான  பிரச்னைகளும், 10 சதவிகித தொடர் விக்கலுக்குநரம்பு தொடர்பான  பிரச்னைகளும் காரணமாக இருக்கலாம்.”




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive