குஜராத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர், வாழ்நாள் முழுவதும்
கஷ்டப்பட்டு சம்பாதித்த ஒரு கோடி ரூபாய் பணத்தை ராணுவத்திற்கு நன்கொடையாக
வழங்கியுள்ளார்.
குஜராத் பாவ்நகரைச் சேர்ந்த 84 வயது முதியவரான ஜனார்தன் பட் என்பவர், எஸ்.பி.ஐ., வங்கியில் எழுத்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
எல்லையில் ராணுவம் படும் இன்னல்களை அறிந்து துயரமடைந்த இவர், ராணுவ வீரர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் எண்ணி, தான் சம்பாதித்து சேர்த்து வைத்த ஒரு கோடி ரூபாய் பணத்தை, தேசிய பாதுகாப்பு நிதியத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். தமது மனைவியுடன் சென்று அவர் இந்த நன்கொடையை வழங்கினார்.
ஜனார்தன் பட், தான் பணியில் இருந்த கால கட்டத்திலும் கூட சக ஊழியர்களுக்காக பல்வேறு உதவிகளை செய்தவர் என்ற பாராட்டைப் பெற்றவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...